என் மலர்
நீங்கள் தேடியது "Recovery"
- சாமி தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர்.
- கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
திருவாரூர்:
சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 71). இவரது மனைவி பானுமதி (67). கணேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்களது மகன் சாமிநாதன் (37), அவரது மனைவி லெட்சுமி (35). சாமிநாதன் சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார்.
சாமிநாதன் குழந்தை லட்சுமி நாராயணன் (வயது 1) ஆகியோர் சென்னையில் இருந்து திருவாரூரில் உள்ள குலதெய்வ கோவிலிலுக்கு காரில் வந்துள்ளனர்.
தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை சாமிநாதன் ஒட்டி வந்துள்ளார். அப்போது விசலூர் என்கிற இடத்தில் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கும், நன்னிலம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்த போதும் கணேசன், பானுமதி, சாமிநாதன், ஒரு வயது குழந்தையான லட்சுமிநாராயணன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
லட்சுமி மட்டும் உயிருடன் இருந்த நிலையில் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நன்னிலம் காவல் –துறையினர் உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்–துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார்.
- தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஹரிநகரை சேர்ந்தவர் ரேவதி. இவர் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வீட்டுக்கு நடந்து வரும் போது இவரது கழுத்தில் கிடந்த செயினை மர்மநபர்கள் அறுத்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரேவதி தனது குடும்பத்தினரும் கூறியுள்ளார் .
ஆனால் யாரும் இதனை கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த ரேவதி திடீரென வெண்ணாற்றங்கரை மாணவர் விடுதி அருகே உள்ள ஆற்றில் ஓரத்தில் தண்ணீரில் இறங்கியவாறு நின்றார். வெகு நேரமாக தண்ணீரில் நின்று கொண்டிருந்தார்.
அவரது குடும்பத்தினர் கூப்பிட்டு பார்த்துட்டு பயனில்லை. இந்த நிலையில் இன்று தஞ்சை பள்ளி அக்ரஹரத்தில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரிடம் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மேயர், ஆணையர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறை வீரர்களை வரவழைத்து ரேவதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகை கடைகள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தவர் தீபக் (வயது 28). இவர் அந்த கடையிலிருந்து 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஊழியர் தீபக்கை இன்ஸ்பெக்டர் ஆனந்த 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது, திருடிய நகைகளை வங்கிகளில் அடகு வைத்த தீபக், அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் கிரிக்கெட் விளையாடியது தெரியவந்தது. மேலும் 44 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்ததற்கான ரசீதுகளையும் அவர் கொடுத்தார். அந்த நகைகளை நீதிமன்றம் மூலமாக மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் திருடிய நகைகளை அல்லிக்குட்டை பகுதியில் உள்ள பச்சாயி அம்மன் கோவில் பகுதியில் புதைத்து வைத்திருப்பதாகவும் தீபக் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது. அதனை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
- இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தர விட்டது.
இதையடுத்து சேலம் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் மங்கையர்க்கரசி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜா மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் அன்ன தானப்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- வடமாநில சிறுமிகள் 3 பேர் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர்
- செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தவர்கள்
கரூர்,
சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் காணாமல் போனத தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காணாமல்போன சிறுமிகள் தமிழகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சத்தீஸ்கரிலிருந்து குழந்தை நல அலுவலர், போலீசார் அடங்கிய குழுவினர் கரூர் மாவட்டத்துக்கு வந்தனர். தொடர்ந்து கரூர் சமூக பாதுகாப்பு துறை தனித்துணை ஆட்சியர் சைபுதீன் தலைமையில் சத்தீஸ்கர் குழுவினர் கரூர் அருகே வளையல்காரன் புதூரில் உள்ள தனிார் செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் உட்பட 11 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகளை மீட்ட போலீசார்
- முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பாக பலர், கோவிலுக்கு வருபவர்களிடம் யாசகம் பெறுவது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலுக்கு சென்ற போலீசார், அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 மூதாட்டிகளை மீட்டு, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தங்களுக்கு பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளால் கைவிடப்பட்டு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக மூதாட்டிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
- ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
- சாக்கடை கால்வாயில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் :
சேலம் அம்மாப்பேட்டையில் ஜோதி தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அம்மாபேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சாக்கடை கால்வாயில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார்?
என்பது குறித்த விசாரித்தபோது, பொன்னம்மாப்பேட்டை சக்தி நகரைச் சேர்ந்த இளங்கோ (வயது 48) என்பது தெரிய வந்தது. எலக்ட்ரீசியனான அவர் குடிபோதையில் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரை கிராமத்தில் கோயில் நிலம் மீட்க்கப்பட்டது
- பேனர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலதி கோயிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலமும், ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தன், தனி தாசில்தார் பிரகாசம் ஆகியோர் மேற்பார்வையில் விஏஓ, சர்வேயர் ஆகியோருடன் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேலும் அந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடமாகும், இந்த நிலத்தில் தனிநபர் எவரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மீறி ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேனர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
- பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.
- இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.
எஸ்.பி.யிடம் மனு
இந்த நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரியவரவே, அவர் தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு அளித்தார்.
இதுதொடர்பாக மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நிலமானது போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
போலி ஆவணம்
இதனையடுத்து மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நடத்தி வரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில் நில உரிமையாளர் ஜுடி மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் முகாமிற்கு அழைக்கப்பட்டு, துணை கலெக்டர் தமிழரசி , தாசில்தார் பகவதிபெருமாள் ஆகியோர் முயற்சியால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜுடியிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவம்
நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு தளபதி சமுத்திரம் பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒலி ஆவணம் மூலம் மற்றொரு நபர் பத்திர பதிவு செய்திருப்பதை அறிந்த சுப்பையா தனது நிலத்தை மீட்டு தருமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி புகார் அளித்து இருந்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீரால் பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை நில உரிமையாளர் சுப்பையாவிடம் வழங்கினர்.
- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
- கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே குப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை. இவருக்கு சொந்தமாக சுமார் 20 அடி ஆழம் ெகாண்ட, கிணறு உள்ளது. கிணற்றின் அருகில் ஒரு பசுமாடு மேய்ந்த போது கால் தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் மற்றும் மீட்பு குழுவி னருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- ராஜபாளையத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்த இடங்கள் மீட்கப்பட்டது.
- ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் சர்வே எண் 176 உட்பிரிவின் கீழ் இடங்கள் வீட்டுமனையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் வாங்கியவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அதில் 8 பேருக்கு சொந்தமான 60 சென்ட் இடங்களை அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து மரங்களை வளர்த்து வந்தனர்.
இடத்தின் உரிமையாளர்கள் கேட்டு சென்றால் அவர்களை ஆபாசமாக பேசி மிரட்டியும் வந்தனர். இது தொடர்பாக இடத்தின் உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தர உத்தரவு வாங்கினர். கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் வட்டாட்சியர் ராமசந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் புல்டோசர்களை கொண்டு அதிரடியாக ஆக்கிமிப்புகளை அகற்றினர்.
அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வட்டாட்சியரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர். ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிரடியாக மீட்டு கொடுத்த கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
- அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கலைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. கலைச்செல்வியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று அயன் பேரையூர் ஏரியில் கலைச்செல்வி பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.