என் மலர்
நீங்கள் தேடியது "grievance"
- விருதுநகர் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ்-அப் மூலம் குறை தீர்க்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
- குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சேவைகளில், மாவட்டத்திற்கு தேவை யான முக்கியமான அரசு சேவைகளின் தகவல்கள், இணையதள முகவரிகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அறிந்து பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதன்மு றையாக விருதுநகர் மாவட்டத்தில் ''விரு'' (VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 94884 00438 என்ற எண்ணிற்கு "HI" என்று அனுப்புவதன் மூலம் இந்த சேவையுடன் தொடர்பு கொண்டால், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சேவைகளான உங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய, வாக்காளர் பட்டியலில் நீக்கம், இடமா ற்றம், திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி பதிவு செய்ய என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
மேலும் மின்னணு வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய, உங்களுடைய வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ள, முதல்வரின் தனிப்பிரிவு-முதல்வரின் முகவரி, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிலவு டமை ஆவணங்கள் -பட்டா, சிட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம், இணையவழி சான்றிதழ் சேவைகள், முக்கிய உதவி எண்கள், அறிவிப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு, தமிழக அரசுத்துறைகளின் சமூக வலைதள பக்கங்கள், இணையதள முகவரிகள் என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.
அந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான சேவையின் ஆங்கில வரிசை எழுத்தை உள்ளீடு செய்து தேர்ந்தெடுத்து பயன் பெறலாம். இந்த சேவையை பொதுமக்கள் 24 மணி நேரமும், எந்த இடத்தில் இருந்தும் தங்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை எண்ணை விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பயனாளிகள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்துள்ளனர். இந்த சேவையில் பொதுமக்கள் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்கும், அதற்கேற்றவாறு சேவை களை வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தரப்பட்ட பொதுமக்கள் இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க் கும் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பாசித் இல்யாஸ் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது:-
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 இடங்களில் மினி ஹைமாஸ் விளக்குகள் சில நாட்களுக்கு முன்பு பொருத்தப்பட்டது. அதில் 3 இடங்களில் விளக்கு எரிய வில்லை. கடற்கரை கழிவு கள் கடலில் கலப்பதால் பகுதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய்கள் போடப்பட்டும் முறையாக பணி மேற்கொள்ள பபடாமல் உள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்று கண்துடைப்பு பணி நடக்காமல் சேர்மன், நகராட்சி கமிஷனர், பொறி யாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி
யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது
இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.
மேலும், செல்போன் எண் பதிவு , மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றை யும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.
- தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
- நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.
சேலம்:
சேலம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ஹிமான்ஷூ தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் வீரேஷ் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.
இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். எண், தொலைபேசி எண் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
- மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி முன்பு அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்பை தொடங்கினார்.
- வடக்கு ரதவீதி வரதராஜபுரம் சந்திப்பில் அமைந்துள்ள கால்வாய் மிகவும் தரைமட்டத்திற்கு சென்று விட்டதால் அதில் புதிதாக உயரமான கால்வாய் வழித்தடம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி:
அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி முன்பு குறைகேட்பை தொடங்கினார்.
அமைச்சர் கீதாஜீவன்
அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
பின்னர் தெப்பக்குளம், மாரியம்மன் கோவில் தெப்பம், செல்வீஜர் தெரு, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, இரண்டாம் கேட் பகுதியில் நடைபெறும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.
கழிவுநீர்
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வடக்கு ரதவீதி, கீழரத வீதி பகுதிகளில் கால்வாய்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கியுள்ளன. அதனால் கழிவுநீர் வீட்டிற்குள் வரும் நிலையுள்ளது. அதை சீர்செய்து தரவேண்டும்.
வடக்கு ரதவீதி வரதராஜபுரம் சந்திப்பில் அமைந்துள்ள கால்வாய் மிகவும் தரைமட்டத்திற்கு சென்று விட்டதால் அதில் புதிதாக உயரமான கால்வாய் வழித்தடம் அமைத்து தரவேண்டும்.
காய்கறி அங்காடி
இந்த சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பண்ணை காய்கறி அங்காடியை போல் மாநகராட்சி மண்டபம் அருகில் அமைத்து தரவேண்டும்.
புதிய ரேஷன் கார்டு மற்றும் விதவை பெண் வேலை வாய்ப்பு, குறுகிய சந்துப்பகுதியில் வீடு மட்டத்தை விட குறைவாக பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மண்டல தலைவர் கலைச்செல்வி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், பகுதி செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்கா ராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், நாராயணன், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், செல்வக்குமார், அவைத்தலைவர் கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
- 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மதுரை
மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் 59 மனுக்கள் பெறப்பட்டதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமயநல்லூரில் 122 மனுக்கள் பெறப்பட்டதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பேரையூர், மேலூரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சேலம்:
போலீஸ் நிலையங்களில் தீர்வு காணாத புகார் மனுக்க ளின் மீது வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது, அப்போது சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி கூட்டத்திற்கு வந்து ஆய்வு செய்தார். குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த மனுதாரர்களின் மனுக்களை வாங்கி விசாரணை மேற்கொண்டார். பின்னர் மனுக்களின் தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண அந்தந்த பகுதி உட்
கோட்ட டி.எஸ்.பி.களுக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டார். பினனர் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் சரகத்தில் இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் போலி டாக்டர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. காதல் திருமணத்தால் ஏற்படும் ஆணவக் கொலைகளை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறையினர் சமூக நலத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி, செல்ல பாண்டியன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் உடன் இருந்தனர்.
- தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உஷாபொன்னி வளவன் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார்.
இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
ஊராட்சி செயலர் சத்தியா, ரேசன் கடை ஊழியர் ஜெகதீஸ், தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- சமையல் கியாஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்களுடன் குறைதீர்கூட்டம் நடந்தது.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் நிறுவன மேலாளர்கள், சமையல் கியாஸ் ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கியாஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்க ளுடன் குறைதீர்கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
சமையல் கியாஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர் தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், அவர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி மாலை 3.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் அனை வரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வார்டுகள் வாரியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அதன்படி இன்று காலை 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இதேபோல் வார்டு முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.
- 24-ந்தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அறை எண்.20) நடைபெறும்.
- அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (அறை எண்.20)திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
- நெல் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயி களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
- விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் எடுத்துரைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிக ளுக்கான குறைகேட்பு மற்றும் விவசா யிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியியல் நிலைய விஞ்ஞானி நட ராஜன் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயி களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் தேசிய வேளாண்மை சந்தை திட்டம் குறித்து விவசாயி களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் நீர் மோலண்மை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) ஜெயக்குமார் எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கை களை ஆய்வு செய்து உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்படும் எனவும், விவசாயிகள் வாய்க்கால் தூர் வாருதல் மற்றும் தடுப்பணை அமைப்பது தொடர்பாக தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி ஆதாரத்தின் அடிப்படை யில் பணிகள் மேற்கொள்ள ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டது. புதுக்கூரைப்பேட்டை மற்றும் விஜயமாநகரம் கிராம விவசாயிகளுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டது. விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பதிலை சம்மந்த ப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்பி வைத்திட அறிவுரை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கண்ணையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன், வேளாண் உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள் மற்றும் 14 வட்டார விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்துகொண்டனர்.