என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332003
நீங்கள் தேடியது "சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் புதுக்கடை பகுதி பொதுமக்கள் கோரிக்கை"
இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் புதுக்கடை பகுதி பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி, மே.28-
புதுக்கடை போலீஸ் நிலையத்தின் கீழ் புதுக்கடை, கீழ்குளம், பேரூராட்சிகள், விளாத் துறை, முஞ்சிறை, பைங்குளம், இனயம்புத்தன் துறை போன்ற ஊராட்சி பகுதிகள் உள்ளன.
மேலும் கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட சில பகுதிகளும் புதுக்கடை போலீஸ் எல்லையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை உள்ளடக்கியது புதுக்கடை போலீஸ் எல்லையாகும்.
குறிப்பாக தேங்காய்பட்ட ணம் மீன்பிடி துறை முகம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை உள்ள டக்கியதா லும், குற்ற சம்பவங்கள் அதிகம் இந்த பகுதியில் நடப்பதாலும் இந்த போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும்.
தற்போது இந்த போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையமாக மாறியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெ க்டராக பணிபு ரிந்தவர் உடல் நலக்குறைவால் இறந் தார். அதன் பிறகு புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்ப டவில்லை. சப்- இன்ஸ்பெக்டர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு அந்த இடமும் காலி யானது.
தற்போது குற்ற சம்ப வங்களை கருங்கல், நித்திர விளை பகுதி போலீஸ் அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.புதுக்கடை காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் 7 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும். இதில் 2 பேர் மரணமடைந்தனர். அடிக்கடி அதிகாரிகளை மாற்றுவதால் இங்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
முழுமையாக அதிகாரி கள் இல்லாத காரணத்தால் குற்ற வழக்குகள் பதிவா வதில் பெரும் இழுபறிகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. வெளிநாடு செல்வோர், மாணவ மாண விகள், அரசு சம்மந்தப் பட்ட விஷயங்கள், சிவில் பிரச்சனைகள் போன்ற வற்றுக்காக பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் பல நாட்கள் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மேலும் புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்கள், கனிம வளங்கள் கடத்தல் போன்றவை அதிகரித்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. எனவே புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உடனடியாக நியமிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X