search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "started clearing canals"

    நெல்லை மாவட்டத்தில் கால்வாய்கள் தூர்வாரும் பணி கலெக்டர் விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக கார், பிசான பருவ சாகுபடி அதிக அளவில் நடைபெறும்.

     
    மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்த அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி நெல் சாகுபடி பணிக்காக அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இதனால் 1-ந்தேதி அணை திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அதே நேரத்தில் மழைக்கு முன்னதாக அனைத்து கால்வாய்களையும் தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    அவர்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கால்வாய், கோடகன் கால்வாய் மற்றும் நெல்லை கால்வாய் ஆகியவற்றை முழுமையாக தூர்வார மாவட்ட நிர்வாகம் சார்பில்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     அதன்படி இன்று நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நெல்லை கால்வாயை தூர்வாரும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
    . ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாயில் படர்ந்திருந்த அமலைச்செடிகள் அகற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர், செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற் பொறியாளர் தங்கராஜ், மாநகராட்சி உதவி கமிஷனர் லெனின், நெல்லை தாசில்தார் (பொறுப்பு) ெலட்சுமி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், உதவி பொறியாளர்கள் மாரியப்பன், சண்முக நந்தினி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    ×