என் மலர்
நீங்கள் தேடியது "Census"
- இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
- பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் உள்ளனர்.
லண்டன் :
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக ஆனது.
இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- படிப்பை இடை்நிறுத்தம் செய்த மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள வடமழைராஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
பள்ளி தலைமையாசியர் ராஜேந்தின் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா, துணைத்தலைவர் சபினிஸ்வரி, ஆசிரியர் கருணாநிதி, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் கோகிலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த பிரவீனா, பிரகதீஸ்வரன் ஆகிய மாணவர்கள் பள்ளியில் இருந்து இடையில் நின்றது தெரியவந்தது. உடனே, அவர்களின் பெற்றோரிடம் பேசி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
- இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கனக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணிநடைபெற்று வருகிறது.
திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் கல்லூரி மாண வர்கள், வனத்துறையினர் என12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பூநாரை,செங்கால் நாரை கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணகான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.
கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறை அலுவலர் ஆயூப்கான் தெரிவித்தார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்விட- வலசை வரும் நீர்வாழ் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- 13 இடங்களில் நடந்த கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு வனத்துறையின் மூலம் மாநில அளவிலான ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதற்காக 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் ஆலோசனையின் படி பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
ஈரம் சார் நிலங்களான சித்திரங்குடி, காஞ்சி ரங்குளம், மனோலி தீவு, அரிச்சல் முனை, பிள்ளைமடம், முனைக்காடு, காரங்காடு, சக்கரக்கோட்டை தேர்த்தங்கால், வாலி நோக்கம், மேல-கீழ செவ்வனூர் பகுதிகளில் மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 7000-க்கும் அதிகமான வாழ்விட மற்றும் வலசை வரும் நீர் வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன.
அவற்றில் குறிப்பி டத்தக்கவை சைபீரியா, மங்கோலியாவில் இருந்து வலசை வரும் வரித்தலை வாத்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் பூ நாரைகள், வட துருவ பகுதிகளை சார்ந்த எண்ணற்ற உள்ளான் வகை பறவை இனங்கள், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வரும் படைக்குருவிகள், அரிய வகை கழுகு இனங்கள் கண்டறியப்பட்டன.
இக்கணக்கெடுப்பு பணியில் உதவி வன பாதுகாவலர்கள் சுரேஷ், சுரேஷ் பிரதாப் மற்றும் வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம், மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், கீழக்கரை, ராமநாதபுரம் கூடுதல் பொறுப்பு வனச்சரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடன் பறவை ஆர்வலர்களான மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில், வேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகளும், கமுதி நம்மாழ்வார் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
- கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே இறுதி வாரத்திலும் நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர் ஈடுபடுகிறார்கள். எனவே கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பொது மக்கள் எவரேனும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
கமுதி
முக்குலத்தோர் புலிப்ப டை கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து பலமுறை சட்ட பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதிவாரியாக கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியின ருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழ கத்தில் ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக் கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.
எனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கான ஆணையம் அமைத்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 முறை இந்த கண க்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
- 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.
டி.என்.பாளையம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்பாளையம் வன ப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இங்கு இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு மழைக்கு முந்தைய கண க்கெடுப்பு, மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு என 2 முறை இந்த கணக்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
இன்று முதல் நாளில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட பெரிய தாவர உண்ணிகளின் எச்சங்கள், கால் தடங்களும், 2-ம் நாளில் நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் என மாற்றி மாற்றி 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்க ர்பாளையம், விளா ங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொத்துகள் பற்றி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது
- அனைத்து விபரங்களும் அலுலக முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொந்த வீடு, அடுக்குமாடி போன்றவற்றின் சொத்துவரி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் சர்வே படிவத்தை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.
பின்னர் உதவி இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.23, 5-வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் -641 604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர்.
- பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர். அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
பாதிப்பு
இதனால் திண்டமங்கலம் ஊராட்சியில் அப்பிநாயக்கன்பாளையம், நல்லகவுண்டம்நாளையம், திண்டமங்கலம், வடக்குபட்டி மற்றும் திண்டமங்கலம் புதூர் ஆகிய 5 கிராமங்களில் அடிப்படை வசதிகளான தெரு அமைப்பது, திண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. இதே போல ஊராட்சியில் உள்ளார். 5 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாதசூழ்நிலை உள்ளது.
மனு
திண்டமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொகையை குறைத்து காட்டி உள்ளதால் 15- வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் , இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக திண்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
- மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
- இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-
கடந்த ஆண்டு பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் , சட்டமன்றம், சட்டமேலவை ஆகியவற்றின் ஒப்புதலோடு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கீடை நடத்த உத்தரவிட்டார்.
மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
இதே போல கேரளாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதுவே உண்மையான சமூகநீதி என்று முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பீகாரை முன்மாதிரியாக கொண்டு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
அதேபோல தேசிய அளவிலான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
- தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டது.
தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால், வீடு மற்றும் பொது சமூக கழிப்பறை, கழிவு சேகரிப்பு, கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதில் தூய்மைப் பணியாளா்களின் குடும்ப விவரங்கள் குறித்து சேகரித்து, அரசு நலத் திட்டங்களுக்கு உள்படுத்தபடவுள்ளது.
இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன் தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று.
- சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டுகளில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் பிரதி நிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும் சில திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன.
இதற்கு ஒரே வழி, தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பா.ஜனதா அரசு இருப்பதால் தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். மகளிர் இடஓதுக்கீடு கூட முழு மனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலை வாக்கு வங்கி அரசியலை கணக்கில் கொண்டு, கண்துடைப்புக்காக நிறைவேற்றியிருக்கிறார்கள். மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று.
சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.
வருகிற 2024 தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுகிற போது, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறுகிற காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.