என் மலர்
நீங்கள் தேடியது "Car accident"
- கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
- பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் கார் கதவை திறந்தபோது ஏற்பட்ட விபத்தில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
Indirect Taxes and Customs என்ற பெயர் பலகையோடு வந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, சைக்கிளில் சென்றவர் கார் கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
அப்போது பின்னாடியில் இருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்த நபர் மீது ஏறி இறங்கியுள்ளது.
இதில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா நகர் போலீசார் உடலை கைப்பற்றினர்.
பின்னர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
- இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஜெய்ப்பூரில் நகர்கர்க் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவில் நேற்று மாலை சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்த மக்கள் காரை துரத்திச் சென்று பிடித்ததில் கார் ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் படுகாயமடைந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குடிபோதையில் கார் ஓட்டிய நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது.
- விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
எட்டயபுரம்:
சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார் (வயது 35). இவர் மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது மனைவி தமிழரசி (26), மகன் அஸ்வரதன் (5) மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார்.
கார் இன்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ராஜ்குமாரின் மனைவி தமிழரசி, அவரது மகன் அஸ்வரதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் காரில் சென்ற அண்ணாமலை மனைவி விஜயா (60) செல்வராஜ் மனைவி தாமரைச்செல்வி என்ற சந்தியா (31), மகன் சபரீசன் (12), சித்தன் மகள் சுமதி (46), கோவிந்தராஜ் மகள் ரம்யா (12), காரை ஓட்டி சென்ற ராஜ்குமார் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
- 4 பேருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் ஊராட்சி, பாலமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகந்தி (33), மகன்கள் லியோ டேனியல் (10), ஜோ டேனியல் (5). நேற்று மாலை ஹரிதாஸ், திருப்போரூரை அடுத்த காயார் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி மற்றும் 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 11 மணி அளவில் ஹரிதாஸ் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் தையூர் நோக்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது எதிரே காயார் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரிதாஸ், அவரது மனைவி சுகந்தி, மகன் லியோ டேனியல் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகன் ஜோ டேனியல் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் காயார் போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார், அவரது மனைவி பிந்து, மகன் அபினேஷ் பால்மோனி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அஸ்வின்குமார் கேளம்பாக்கத்தில் செருப்பு கடை வைத்துள்ளார். அவர் இரவு கடையில் வியாபாரம் முடிந்து காரில் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி உள்ளார்.
விபத்தில் காயம் அடைந்த சிறுவன் ஜோ டேனியல், அஸ்வின் குமார் உள்பட 4 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் சல்லகேர் மற்றும் பல்லாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மௌலா, சமீர் மற்றும் ரெஹ்மான் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் 2 பேர் குழந்தைகள். அனைவரும் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில் அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை பல்டி அடித்தது. பல்டி அடிக்கும் போதே காரில் இருந்த ஒருவர் கிழே விழுந்த அதிர்ச்சி காட்சியும் அதில் தெரிகிறது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து ஏற்படுத்திய லம்போர்கினி கார் பறிமுதல்
- கார் மோதியதில் காயமபட்ட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிய தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைதான தீபக்கிற்கு சூரஜ்பூரில் உள்ள நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி கார் நின்றது.
விபத்துக்கு பின்பு எடுக்கப்பட்ட வீடியோவில், "விபத்துக்குள்ளான சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை நோக்கி கட்டுமான தொழிலாளர்கள் ஓடுகின்றனர். காரை ஓட்டிய நபரிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்க, அதற்கு காரை ஓட்டியவர், 'இங்கே யாராவது இறந்தார்களா?' என்று அலட்சியமாக பதில் கூறினார்.
கார் மோதியதில் காயமடைந்த 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
- நான் மெதுவாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார்
- அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்டுள்ளார்.
இன்று மாலை நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி நின்றது.
சம்பவத்தின் பின் இதுதொடர்பாக வெளியான வீடியோவில், நடைபாதையில் சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் நின்றிருப்பதும், கட்டுமான தொழிலாளர்கள் அதை நோக்கி ஓடுவதையும் காட்டியது.
காரை ஒட்டியவர்களிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "நீங்கள் இங்கு ஸ்டண்ட் கற்றுக்கொண்டீர்களா?, இங்கே எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்கிறார்.
அதற்கு காரை ஓட்டியவர் அலட்சியமாக, இங்கே யாராவது இறந்தார்களா? என்று கேட்கிறார். அந்த வீடியோவைப் பதிவுசெய்து கொண்டிருந்த நபர், "காவல் துறையினரை அழைக்கவும்" என்று கூறுகிறார் அதற்கு கார்ஓட்டி "நான் மெதுவாக ஆக்சிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார், அதற்கு வீடியோ எடுப்பவர், " அதை மெதுவாக அழுத்தினீர்களா?" என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கார் மோதியதில் படுகாயமபட்ட 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் ஆபத்தில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
- பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சூர்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 57). இவரது உறவினர்கள் சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத். இவர்கள் 5 பேரும் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதானந்தன் ஓட்டி சென்றார்.
அவர் செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். திருச்சூர் அருகே கொண்டாழி-திருவில்யா மலை ஆகிய 2 பகுதிகளை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே எழுண்ணுள்ளத்து கடவு பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
பின்னர் கார், நீரில் மூழ்க தொடங்கியது. ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நபராக 5 பேரும் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம், ஆற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர்.
- உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடையம்:
சென்னையை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளி விடுமுறையையொட்டி இவர் காரில் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் அசோக்குமார், ஆசிக் ஆகியோருடன் காரில் நெல்லைக்கு வந்தார்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சுற்றுலா சென்ற அவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை அங்கிருந்து கடையம் வழியாக குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டனர். காரை அசோக்குமார் ஓட்டினார். அதிகாலை 4 மணி அளவில் கடையத்தை அடுத்த முதலியார்பட்டி அருகே கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த இடிபாட்டில் காரை ஓட்டி வந்த அசோக்குமார் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த அவரது நண்பர்களான மற்றொரு அசோக்குமார், ஆசிக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு அசோக்குமார் மற்றும் ஆசிக் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கட்டுப்பாடு இழந்து, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாழப்பாடி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவிரிநகர் பகுதியில் சேர்ந்தவர் மருந்து விற்பனை பிரதி நிதி லட்சுமிபதி (வயது 52). இவரது மகள் அனு ஸ்ரீக்கு, அண்மையில் நடை பெற்ற கலந்தாய்வில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி யில் இடம் கிடைத்துள்ளது.
மகளை கல்லூரியில் சேர்த்து விடுவதற்காக, லட்சுமிபதி தனது மனைவி ஜெயசுதா (42). மகள் அனுஸ்ரீ (18). மகன் திருப்புகழ் (11). உறவினர் நாராயணன் ஆகியோருடன், இன்று அதிகாலை போச்சம்பள்ளியில் இருந்து வாழப்பாடி வழியாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் நோக்கி காரில் சென்றார். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினரான ஓம்சக்தி (28).என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அருகே, இன்று காலை கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கட்டுப்பாடு இழந்து, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லட்சுமிபதி, ஜெயசுதா, திருப்புகழ், அனுஸ்ரீ, ஜெயசுதாவின் சகோதரர் நாராயணன், கார் டிரைவர் ஓம்சக்தி ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
காருக்கு அடியில் சிக்கி தவித்த இவர்களது அலறல் சத்தம் கேட்ட இப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் இணைந்து 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவம னைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது.
- எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.
சூளகிரி:
ஓசூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு செல்ல முடிவு செய்த காந்தி நேற்று இரவு தனது மனைவி நவநீதா (40), குழந்தைகள் பிரதீபாஸ்ரீ, கோகுலன் ஆகியோருடன் வாடகை காரில் புறப்பட்டுள்ளனர்.
காரை ஓசூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தினேஷ்(32) என்பவர் ஓட்டி சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பள்ளி என்ற இடத்தருகே சென்றபோது திடீரென கார் டயர் வெடித்தது.
இதில் நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.
இதில் கார் டிரைவர் தினேஷ், காந்தியின் மனைவி நவநீதா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காந்தி மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இடிபாடுகளில் சிக்கிய காந்தி, பிரதீபாஸ்ரீ, கோகுலன் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜே.சி.பி.எந்திரம் விபத்தில் சிக்கிய காரை சாலையிலிருந்து அகற்றினர்.
இந்த விபத்தால் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.