என் மலர்
நீங்கள் தேடியது "FESTIVAL"
- தனிசன்னதியில் செல்வ முத்துக்குமரர், செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் அருள்பாலிக்கின்றனர்.
- சூரசம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெருமானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வை த்தீஸ்வ ரன்கோ யிலில் தருமபுரம்ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் தனிசன்னதியில் செல்வ முத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
இங்கு நடைபெறும் சூரச ம்ஹார விழாவின்போது முருகப்பெருமான் சிவபெரு மானிடம் வேல்வாங்கி சம்ஹாரத்திற்கு புறப்படுவது ஐதீகம். இதனிடையே செல்வ முத்துக்குமாரசுவாமிக்கு கந்த சஷ்டி விழா சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.
முன்ன தாக கிருத்திகை மண்ட பம் எழுந்தருளியவள்ளி, தெய்வானைஉடனாகிய செல்வ முத்துக்குமா ரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா ரம் செய்து மகாதீபா ராதனை காட்டப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமா ச்சாரிய சுவாமிகள்பங்கேற்று தரிசனம் செய்தார்தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் தருமபுரம் ஆதீனம் அடிபிரதட்சணம் செய்து வழிப்பட்டார்.
இதில் கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச னம் செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷே கம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
- தென்கரை கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது.
- மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனர் செந்தில்குமார், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 11-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தினமும் சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம்-ஆராதனை நடந்தது.நேற்று மாலை அன்னை பராசக்தியிடம் நாகேஸ்வரன் பட்டர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் வெற்றிவேல்முருகா, வீரவேல்முருகா என்று கோஷமிட்டனர். மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனர் செந்தில்குமார், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இன்று காலை பாவாடை தரிசனம் நடந்தது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை பிரதோச கமிட்டியினர் செய்திருந்தனர். செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் பணியாளர்கள், பிரதோச கமிட்டியினர் உட்பட ஏராளமான பக்தர்கள் சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்டனர்.காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
- தேசிய ஒற்றுமை தின விழா நடந்தது
- வருவாய் துறை சார்பில் நடந்தது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஒற்றுமை தின நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை தின நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை வருவாய் துறை சார்பில் கந்தர்வகோட்டை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஒற்றுமை நாள் ஓட்டத்தை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஒற்றுமை நாள் ஓட்டம் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஸ்ரீதரன், திலகவதி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
- குளித்தலை எம்.எல்.ஏ.மாணிக்கம் வழங்கினார்
கரூர்:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது,
அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிவாசல்களில் உள்ள 53 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையேற்று உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சந்தியா, கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் முருகன், குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி, துணை வட்டாட்சிய வைரப்பெருமாள், அரசு வழக்கறிஞர் சாகுல் ஹமீது, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம், நகர் மன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், நகர பொருளாளர் தமிழரசன், நகரத் துணை செயலாளர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி செந்தில்குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்த்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.
- நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடை நெல் அறுவடைத்திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி சுற்று வட்டார கிராம விவசாயிகளை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கருணாநிதி பண்ணையில் பயிரிட்ட திருச்சி -1 மற்றும் திருச்சி-3 ஆகிய நெல் இரகங்களின் சிறப்புகளை விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நெல் அறுவடையில் கலந்துகொண்டனர். நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
இவ்விழாவில் நெல் சாகுபடி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். எஸ்.ஆர் பட்டினம், விசாலயன் கோட்டை, கலிப்புலி, காளையார்கோவில் மற்றும் புலிக்குத்தியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர், கல்லூரியின் இயக்குநர் கோபால் நன்றியுரை வழங்கினார்.
- வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தில் முப்பெரும் விழா நடந்தது. சேர்மன் வி.பி.எம். சங்கர் தொடங்கி வைத்தார். தாளாளர் பழனி செல்வி சங்கர் குத்துவிளக்கு ஏற்றினார்.
துணை சேர்மன் தங்க பிரபு முன்னிலை வகித்தார். இயக்குநர் நாச்சியார் கண்ணன் வரவேற்றார். நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா மற்றும் கலைக்கல்லூரியில்அடுப்பு இல்லாமல் சமைக்கும் உணவு திருவிழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடந்தன.
இதில் கலைக்கல்லூரி மாணவிகள் தனித்தனி குழுவாக இணைந்து அடுப்பு இல்லாமல் உணவுப்பொருட்களை சமைத்து காட்சிப்படுத்தினர். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் மாணவிகளின் மேம்பாட்டு திறன் வளர்ப்பு அங்கீகாரம் பெற்ற பேச்சாளர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கோகர்ணா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாபலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும். இது பாரம்பரிய திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் அரபிக்கடலை நோக்கி அமைந்துள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் ஆண் பக்தர்கள், மேலாடை இன்றி அதாவது சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மகாபலேஸ்வரரை தரிசனம் செய்ய செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு தான் ெசல்கிறார்கள்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கோவில் அமைந்துள்ள மேற்கு வாசல் ரத வீதியில் பக்தர்கள் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்றால் கோவிலின் மேற்கு வாசல் வழியாக தான் சென்றாக வேண்டும். சுற்றுலா வருபவர்களும் கோவிலின் மேற்கு வாசல் வழியாக தான் கடற்கரைக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பனியன் உள்ளிட்ட அரைகுறை ஆடையுடன் தான் சென்று வருகிறார்கள்.
தற்போது மேற்கு வாசல் ரத வீதியில் அரைகுறை ஆடையுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருபுவனை தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
- விழாவுக்கு பள்ளி துணைமுதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி துணைமுதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பாடகர் வேணுசெல்வம் விழிப்புணர்வு பாடல்களை பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.
நிகழ்ச்சியில் விரிவுரையாளர் மாயவன், ரஷித், பழனிவேல், கருணை ஞானபிரகாஷம், முருகானந்தம், அஜித்குமார், கிருபாகரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆங்கில விரிவுரையாளர் தியோடர் நன்றி கூறினார்.
- பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது
- வட்டார கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
கரூர்:
கரூர் கொளந்தா கவுண்டனூர் பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் மணிமாலா தலைமை வகித்து பரிசுகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி உறுப்பினர் அருள்மணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- தொடக்க வேளாண்மை சங்கத்தில் 69-வது கூட்டுறவு வார விழா நடந்தது
- மண்டல இணைப்பதிவாளர் தொடங்கிவைத்தார்
கரூர்:
தமிழகம் முழுவதும் 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ராஜாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 'மக்களுக்காக கூட்டுறவு, மக்களைத் தேடி கூட்டுறவு' நிகழ்ச்சியை மண்டல இணைப்பதிவாளர் ப.கந்தராஜா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு கல்வி, தொழில்முறை மேலாண்மை மற்றும் புத்தாக்கப் பயிற்சி என்ற கருப்பொருளின் அடிப்படையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. பின்னர் இணைப்பதிவாளர் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்றும், விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்றும் தமிழ்நாடு அரசால் கூட்டுறவுத் துறை மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விரிவாக மக்களிடம் எடுத்துரைத்துத்தனர்.
- ரோவர் கல்வி குழுமத்தில் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது
- பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் பயிற்சிக்கு
பெரம்பலூர்:
பெரம்பலூர் தந்தை ரோவர் கல்விக்குழுமம் சார்பில் ரோவர் அகாடமி தொடக்க விழா நடந்தது.
பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ரோவர் அகாடமி தொடக்க விழாவிற்கு ரோவர் கல்விநிறுவன துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலெட்சுமி, அகாடமி இயக்குநனர் ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
ரோவர் கல்விநிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து சேர்க்கையை தொடங்கிவைத்து பேசுகையில், இன்றைய சூழலில் உயர்கல்வி பயில்வதும், வேலைவாய்ப்புபெறுவதும் பெரும் சவாலாகவும், போட்டியாகவும் உள்ளது. தந்தை ரோவர் கல்விக்குழுமத்தின் சார்பாக ரோவர் அக்காடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முதல்கட்டமாக நீட், ஜேஇஇ தேர்விற்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு ஏழை,எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழாவில் பள்ளி முதல்வர் சந்திரசேகர், தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், மேலாளர் ஜெயசீலன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.