என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 333356
நீங்கள் தேடியது "Seed Balls"
வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. காட்டு யானைகள் உணவு தேடி இடம் மாறிச் செல்கின்றன. உணவு கிடைக்காத சமயத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.
இதனை தடுக்கும் வகையிலும் வனப்பகுதியை செழுமையாக்கும் வகையிலும், யானைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலும் வனத்துறையினர் புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன்படி நேற்று கூடலூர் வனப்பகுதியில் 1000 மூங்கில் விதை பந்துகளை வீசினர்.
இதுபற்றி வனத்துறையினரிடம் கேட்டபோது யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் மொத்தம் 10 ஆயிரம் மூங்கில் விதை பந்துகள் வீச முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1000 விதைப்பந்துகள் வீசப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் எதிர்காலத்தில் மூங்கில் காடுகள் பெருகி விடும். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள்ளும் வராது என்றனர்.
வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு வன ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
×

X