என் மலர்
நீங்கள் தேடியது "மழை"
- அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.
- ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் அருவிக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
- அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நெல் கொள்முதல் நிலையங்களில் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைவது காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது.
- மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்வதற்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 12,000-க்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்தன. நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
செஞ்சியில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைவது காலம் காலமாக நிகழ்ந்து வருவதால், எதிர்காலத்தில் அத்தகைய பாதிப்புகளைத் தடுக்க அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 10,000 மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படுவதையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுத்த நாளே அரவை நிலையங்களுக்கோ, மண்டல அளவிலான கிடங்குகளுக்கோ கொண்டு செல்லப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.
- ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி:
நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவை யொட்டி சுற்றுலா பயணி களை கவரும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்ப டும்.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடந்து வருகிறது.
அத்துடன் தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.
கண்காட்சியினை கண்டு ரசிக்கவும், குளு,குளு சீசனை அனுபவிக்கவும்வெளி மாநிலங்கள், வெளிமா வட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ள னர்.
வெள்ளிக்கிழமை முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
அவர்கள் பூங்காவில் மலர் கண்காட்சியையொ ட்டி, பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பூத்து குலு ங்கிய பூக்களை பார்வை யிட்டனர்.மேலும் பூங்காவில் லட்சக்கணக்கான கார்னே சன் மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, பல ஆயிரம் மலர்களை கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
அங்குள்ள புல் மைதான த்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சியை யொட்டி அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்கள், மலர்களால் உருவான யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் கண்டு ரசித்தனர்.
நேற்று மதியம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் மழைக்கு அங்கிருந்த மரத்த டிகளில் தஞ்சம் அடைந்த னர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி கண்காட்சியை பார்வையிட்டு, மகிழ்ந்தனர்.
மழையால் அங்கு குளு, குளு காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை இது வரை 60 ஆயிரம் பார்வையிட்டுள்ளனர். இதேபோல் ரோஜா கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இன்று 4-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் மலர் கண்கா ட்சியை பார்வையிட்டனர்.
ஊட்டிக்கு ஏராளமானோர் சொந்த வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் பயணித்தும் ஊட்டிக்கு வருகிறார்கள்.
இப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்ப்பது சிரமமானது.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும், அவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில், ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து 20 சுற்று பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் மூலம் படகு இல்லம், பிங்கர் போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஆவின் வளாகம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த பஸ்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.100 கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவதும், அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
- தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது.
- அரியானா மாநிலம் குருகிராமில் மழை பெய்துள்ளது.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் நேற்று இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி இருந்து. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது. ஆர்.கே.புரம் பகுதியில் மழை பெய்தது. அரியானா மாநிலம் குருகிராமிலும் மழை பெய்துள்ளது.
டெல்லியில் இன்று காலை முதலே ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
- வெயிலின் தாக்கமானது முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இரவு முழுவதும் மிதமான மழை பெய்து வந்த நிலையில் காலையில் மழைப்பொழிவு குறைந்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீரானது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப் பட்டனர்.
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கமானது முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
- தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பரம்பிக்குளம்-ஆழியாறு பிஏபி திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது.
இந்த அணையின் முழு கொள்ளளவான 17.82 டி.எம்.சியை எட்டிவிட்டால் ஒரு ஆண்டுக்கு குடிநீருக்கும், பாசனத்துக்கும் போதுமானதாக இருக்கும்.
இந்த பிஏபி திட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் திட்டத்தில் உள்ள அனைத்து தொகுப்பு அணைகளும் நிரம்பின. இதையடுத்து பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தென்மேற்கு பருவமழை குறைந்த பிறகு அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து. நேற்று பரம்பிக்குளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி முழுவதுமாக நிரம்பியது.
அணை நிரம்பியதை அடுத்து, பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து மதகுகள் வழியாக 2,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
- ஓசூர் ரோடு, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நகரில் எங்கு பார்த்தாலும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, மடிவாளா, ஓசூர் ரோடு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஓசூர் ரோடு, எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூரு மாநகரில் தொடர்ந்து போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம், இணைப்பு சாலைகளில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. 2 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2.30 மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடுமையாக தவித்தனர்.
இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் வாகனங்களை சாலையில் விட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர். இந்த காட்சிகளை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதில் பெங்களூருவில் போக்குவரத்து அவலத்தை பாருங்கள் என்று கூறியுள்ள அவர்கள், போலீசார் இதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
- ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும்.
- ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பெட்டி நாயக்கன்பட்டியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த அய்யாவு (வயது75) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் எவ்வாறு எடுத்துச் செல்வது என்று தெரியாமல் விழித்தனர். இவர்கள் மயானத்திற்கு உடலை எடுத்து செல்லும் பாதையில் உள்ள சுரங்கத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருந்தது. இன்று காலையும் இடைவிடாமல் மழை பெய்ததால் வேறு வழியின்றி பெட்டி நாயக்கன்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக இடுப்பளவு தண்ணீரில் உடலை தூக்கி பிடித்து ஆற்றைக் கடப்பது போல் கடந்து சென்றனர். பின்னர் திண்டுக்கல்-திருச்சி சாலை ஓரம் உள்ள தங்களது மயானத்தில் வைத்து இறுதிச்சடங்கை செய்தனர்.
இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு, கோவிலூர், பாளையம், அய்யலூர் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீரை ரெயில்வே துறை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நின்றாலும் அந்த தண்ணீர் பல நாட்கள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரவிலும் வனப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பழைய குற்றால அருவி பகுதியை சுற்றி சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.