என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநாடு"

    • ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
    • 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில், நாளை 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் காஷ் மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கேரளா முதல்வர் பினராயி விஜ யன், பிருந்தா காரத், திரி புரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்-திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெறும் பொது மாநாட்டை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா. சி.பி.ஐ. (எம்.எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபங் கர் பட்டாச்சார்யா, புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்திப் பேச உள்ளனர்.

    கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரு மான கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்ற, வெங்கடேசன் எம்.பி. மற்றும் மாநிலத்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மாலை நேரங்களில் ஜானகியம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில் கலைநிகழ்ச்சிகள்-கருத்தரங்குகள் நடை பெறுகின்றன.

    இதில், 3 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அமைச்சர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், திரைப்பட இயக்கு நர்கள் உள்ளிட்ட ஆளுமை கள் பங்கேற்கின்றனர்.


    இதன்படி நாளை மாலை 5 மணிக்கு பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம், திண்டுக்கல் சக்தி போர்ப் பறை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோரின் உரை வீச்சும் அரங்கேறுகின்றன.

    3 ந்தேதி மாலை 5 மணிக்கு, கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை'என்றதலைப்பில் மாநில உரிமைகள் பாது காப்புக் கருத்தரங்கம்' நடைபெறுகிறது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரி சுதாகர். சி.பி.எம். அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

    4-ந்தேதி மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் ஆடல், பாடல், சென்னைக் கலைக்குழுவின் நாடகம், கானா விமலாவின் பாடல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. திரைக் கலைஞர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் சமுத்திரக் கனி, வெற்றிமாறன் ஆகி யோர் உரையாற்றுகின்றனர்.

    6-ந்தேதி மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்கு நர்கள் மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் ஆகியோர் பேசுகிறார்கள்.

    வரலாற்றுக் கண்காட்சி யை மூத்த ஊடகவியலாளர் என்.ராம் திறந்து வைக்கி றார். புத்தகக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. பரமேஸ்வரன் திறந்து வைக்கிறார்.

    6-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில், 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் என். சங்கரய்யா நினைவுத்திடலில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பிரம் மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி. சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    • முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், ஆய்வகத்தில் ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என விவசாய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • 100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்,

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விவசாய தொழிலாளர் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார்.

    தாலுகா செயலாளர் அங்குதன் தொடங்கி வைத்தார். மாநிலதுணை தலைவர் வசந்தாமணி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு செயலாளர் முருகன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும். வைகை ஆற்றில் வரும் தண்ணீர் வீனாக கடலில் கலக்கிறது. இதை முறைப்படுத்தி பரலை ஆறு, கூத்தன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, அனைத்து கண்மாய்கள்- ஊரணிகளுக்கு, குடி நீருக்கு, பாசனத்துக்கு, பயன் பெறும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயி களுக்கும் தட்டுபாடின்றி யூரியாவும், உரங்களும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர் புறவழி சாலை வேலையை உடனே தொடங்க வேண்டும். முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில். சி.டி.ஸ்கேன், ஆய்வகத்தில் உள்ள ஊழியர் பற்றாக்கு றையை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின், பெரம்பலூா் மாவட்ட 4 ஆவது மாநாடு நடந்தது
    • மாவட்ட 4 வது மாநாடு நடந்தது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின், பெரம்பலூா் மாவட்ட 4 ஆவது மாநாடு நடைபெற்றது.

    பெரம்பலூா் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இம் மாநாட்டுக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தொடக்க உரையாற்றினாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.எம். சக்திவேல் அஞ்சலி தீா்மானமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் எம். கருணாநிதி மாநாட்டு அறிக்கையும் வாசித்தனா். மாநிலத் தலைவா் பி. செல்லக்கண்ணு நிறைவுரையாற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில், மாவட்டத் தலைவராக எஸ். பாஸ்கரன், மாவட்டச் செயலராக ஆா். கோகுலகிருஷ்ணன், பொருளாளராக எம். கருணாநிதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

    இதில், மருத்துவா் சி. கருணாகரன், சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளா் அ. கலையரசி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில துணைச் செயலா் வீர செங்கோலன், வழக்குரைஞா் ப. காமராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    முன்னதாக, வழக்குரைஞா் ஸ்டாலின் வரவேற்றாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகி பி. கிருஷ்ணசாமி நன்றி கூறினாா் 

    • நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, மற்றும் பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் சார்பில் மிலாது நபி மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு பரமத்தி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தியில் அனைத்து மதத்தினர் பங்கேற்ற மிலாது நபி, மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.

    மத நல்லிணக்க மாநாடு

    நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, மற்றும் பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் சார்பில் மிலாது நபி மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு பரமத்தி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார்.

    பரமத்தி நூருல் இஸ்லாம் புது பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் இமாம்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    கலந்து கொண்டவர்கள்

    மாநாட்டில், நாமக்கல்லை அடுத்துள்ள கொல்லிமலை ஜீவகாருண்ய விஷ்வ கேந்திரா ஓம் குருவன நிறுவனர் பிரம்மஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிகள், சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி பேராசிரியர் முகமது அபுதாஹிர், நாமக்கல் காவடிப்பட்டி கிருபாசனம் சர்ச் பாஸ்டர் வில்சன் டோமினிக், மற்றும் இந்து கிறிஸ்தவ, முஸ்லிம் குருமார்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்க சிறப்புரையாற்றினர்.

    தோழமையுடன்

    நாட்டில் பல்வேறு பிரித்தாலும் சூழ்ச்சியால் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் அனைத்து மதத்தினரும் தோழமையுடன் செயல்பட வேண்டும் என கேட்டு கேட்டுக்கொண்டனர். இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்த குருமார்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் லயன்ஸ் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
    • முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தூத்துக்குடியில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் மாவட்ட அளவில் 545 மாணவர்களின் 30 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் செழியனின் கண்டுபிடிப்பு தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது.

    மேலும் இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிக்கும் தகுதி பெற்றுள்ளார். மாணவர் செழியனை லயன்ஸ் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர். முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    • புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது
    • அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு  நடைபெற்றது. தமிழ் நாடு மாநில செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் கலந்து கொண்டு மனறத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். மாணவர் பெருமன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செங்கோடன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் கைலாச பாண்டியன் மற்றும் தேசியக்குழு உறு ப்பினர் வழக்கறிஞர் பவதாரணி, இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் மாவட்டச் செயலாளர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் விஜய் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


    • தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி.
    • அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும்.

    சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

    இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி.

    தொழில்துறையில் 13வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வந்துள்ளோம். தொழில் தொடங்க உகந்த இடம் என்ற இடத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது.

    பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது.

    புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதுரை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் தொழில் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலக அளவிலான முதலீட்டாளர்கள் பங்குபெற வேண்டும்.

    மும்பை, டெல்லி போன்ற நகரங்களைவிட சென்னையில் அதிக புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் புத்தொழில் நிறுவனம் தொடங்கினால் மானியம் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மாநாடு நடைபெற்றது
    • காணொளி வாயிலாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 46-வது இந்திய சமூக அறிவியல் 5 நாள் மாநாடு இன்று தொடங்கி நடைபெறுகிறது. மாநாட்டை சென்னையில் இருந்து காணொளி மூலமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலை, சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை நாட்டில் இருக்கும் சுய சார்பு நிலைகள், இனிமேல் சுயசார்பு நிலையை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்கள் ஆகியவற்றினை கருப்பொருளாக வைத்து வாழ்க்கை தரத்தை மதிப்பீடு செய்தல், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மற்றும் பாகுபாடு, வன்முறை, அச்சம் இல்லாத மாண்புடனான வாழ்க்கை, இந்திய மக்கள் அனைவரும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உண்டான விவாதங்களை மைய கருப்பொருளாக கொண்டு இம்மாநாடு நடைபெற்று வருகிறது.

    இதில் கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். 75 வது ஆண்டு இந்திய சுயராஜ்யத்தின் மீதான அறிவியல் பூர்வமான எதிர்கால திட்டங்களை மையமாக வைத்து விவாதங்களும் நடக்கின்றன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் மா. செல்வம், பதிவாளர் கணேசன், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் கம்பத்தூர் முரளிதர், கேரள மாநிலம் முன்னாள் தலைமைச் செயலாளர் விஜய்ஆனந்த், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான தங்க ஜெயராமன், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை வழங்கி பேசுகின்றனர். இக்கருத்தரங்கள் வழங்கப்படும் ஒவ்வொரு கருத்துக்களையும் தொகுத்து பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை குறித்து அறிக்கையை அந்தந்த துறைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த மாநாட்டினை அலகாபாத் இந்திய சமூக அறிவியல் அகாடமி இணைந்து நடத்துகிறது.

    • பேரணியுடன் தொடங்கியது
    • முக்கிய வீதிகளில் ஊர்வலம்

    புதுக்கோட்டை,

    அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10-வது மாநில மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து பல வாகனங்களில் ஆயிரக்கணக்கான விவசா யத் தொழிலாளர்களும், செம்படைத் தோழர்கள் நேற்று புதுக்கோட்டையில் குவிந்தனர். புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டா னாவில் தொடங்கிய பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.ச ண்முகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சீருடை அணிந்த பெண்களின் கொடி அணிவகுப்பு, சீருடை ஆண்களின் கொடி அணிவகுப்பு, செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆட்டக்கலைகள், வாண வேடிக்கைகள், கொள்கை முழக்கங்களுடன் தொடங்கி ய இப்பேரணியானது திலகர்திடல், பழநியப்பா முக்கம், மேல ராஜவீதி, தெற்கு நான்காம்வீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பேரணியில் அகில இந்திய, மாநிலத்தலைவர்களைத் தொடர்ந்துமாவட்ட வாரியாக பல்லாயிர க்கணக்கானோர் அணி வகுத்து வந்தனர். பேரணி யானது பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.பொதுக்கூட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ. சிபிஎம் மாவ ட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வி.தொ.ச. மாநில செயலாளர் அ.பழநிசாமி, துணைத் தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வரவேற்க, வரவேற்புக்குழு பொருளாளர் கி.ஜெய பாலன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் ஆலங்குடி விடியல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • சிறுகனூரில் தொடங்கியது
    • கண்காட்சி அரங்கம் திறப்பு

    திருச்சி,

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு திருச்சி சிறுகனூரில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். காலையில் 9 மணிக்கு கண்காட்சி அரங்கம் திறக்கப்பட்டது. இதனை இஸ்லாமிய மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.இதை எடுத்து மாநில நிர்வாகிகள் தொடக்க உரையாற்றினர். மாநாட்டில் மாநில செயலாளர் இம்ரான் உருது உரையும், மாநிலச் செயலாளர் அமீன் ஆங்கில உரையும் நிகழ்த்தினர். இந்த மாநாட்டில் மதரசா மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடக்கிறது .பித்அத்உருவாக பெரிதும் காரணம் ஆலிம்களா? மக்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மேலாண்மை குழு தலைவர்சம்சுல் லுஹா ரஹ்மானி,பேச்சாளர் சுலைமான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தவ்ஹீத் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.பல்வேறு தலைப்புகளில் ஜமாத்தின் முன்னணி தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் சிறப்பு ரையா ற்றுகின்றனர். மத்திய அரசினாலும், பல அமை ப்புகளாலும் இஸ்லா மியர்கள் படும் நெருக்கடிகள் குறித்தும், தீர்வு காணும் வகையிலும் மக்களிடம் விளக்கி வ மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    • விஞ்ஞானிகள் சங்கம் சார்பில் அக்மெட் 2022 என்ற பெயரில் வருடாந்திர அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது.
    • இந்த மாநாடானது வேளாண் வானிலை உத்திகள் எனும் தலைப்பில் நடக்கிறது.

    வடவள்ளி,

    கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் வானிலை விஞ்ஞானிகள் சங்கம் சார்பில் அக்மெட் 2022 என்ற பெயரில் வருடாந்திர அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது.

    மாநாட்டினை வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மூத்த காலநிலை நிபுணர் பி.வி.ரமணா ராவ் முன்னிலை வகித்தார். 3 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது.

    இந்த மாநாடானது வேளாண் வானிலை உத்திகள் எனும் தலைப்பில் நடக்கிறது.

    தற்போது மாறிவரும் காலநிலை சூழலில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பின் காரணமாக பசுமைக்குடில் வாயுக்களின் தாக்கம்.

    கரியமில வாயு மற்றும் காற்றின் வெப்பநிலையின் அதிகரிப்பு, உமிழ்வின் தாக்கம், காலநிலை மாற்றம், பல்வேறு பயிர்களில் தாக்கம், எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்கள் உருவாக்குதல், உணவு உற்பத்தியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து வானிலை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.

    உணவு உற்பத்தியை நிலை நிறுத்த இந்திய வானிலை ஆய்வுத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை, மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்களில் இருந்து 250 ஆராய்ச்சி–யாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாநாட்டிற்காக 250 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டு உள்ளது.

    கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் கலாராணி, கருத்தரங்கு செயலாளர் ராமநாதன் ஆகியோர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்னர். 

    • ஜாக்டோ - ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட மாநாடு நடந்தது.
    • கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், மாதப்பன், மாரப்பன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    இதில் நிர்வாகிகள் ஹரி, தினேஷ், சரவணன், பொன்நாகேஷ், பெருமாள், கோவிந்தராஜ், வெங்கடேசன், ஜகதாம்பிகா, நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முடிவில் பெருமாள்சாமி நன்றி கூறினார்.

    இந்த மாநாட்டில், பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஊதிய மாற்றம், 21 மாத நிலுவைத் தொகையை உடன் வழங்கிட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×