என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95366"

    ஏற்காட்டில் கனமழை பெய்ததது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காடு, வீரகனூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோடை காலத்தில் பெய்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் ேதங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 40.6 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 25, ஓமலூர் 9.6, கரியகோவில் 8, கெங்கவல்லி 7, தம்மம்பட்டி 4, சஙககிரி 2.1, ஆனைமடுவு 2, சேலம் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 100.1 மி.மீ. மழை பெய்துள்ளது.  

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 576 பாதுகாப்பு முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
    • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மேற்கு வங்க அரசு வலியுறுத்தல்.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்துள்ளது. வங்காளதேசத்தை இன்று அது கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் உதவ வேண்டும்104 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 323 டன் அரிசி உள்பட உணவு பொருட்களும் விநியோகிக் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • இன்று காலை நிலவரப்படி சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவில் புயல் மையம்கொண்டிருந்தது
    • வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும்.

    புதுடெல்லி:

    வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்து இருக்கிறது. இந்த புயலுக்கு சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வங்காளதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது.

    இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், சிட்ரங் சூறாவளி புயல் இன்று காலை நிலவரப்படி சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கி.மீ. தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். தொடர்ந்து வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும், என்று தெரிவித்து உள்ளது.

    புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக திரிபுராவில் அதிக மழை பெய்து மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், அங்கு 24 மணி நேரத்தில் 20 மிமீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    திரிபுரா, அசாம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலட்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் வரும் 26ம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புயலை முன்னிட்டு இன்றும், நாளையும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளது. புயலானது, மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவித்து உள்ளது. 

    • இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
    • அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    கடலூர்:

    அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24-ந் தேதி புயலாக உருவெடுக்க கூடும் என கூறப்படுகிறது.

    இதையொட்டி இன்று அதிகாலை 2 மணி முதல் விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 7 மணி வரை தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது. மழை காரணமாக அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    • திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
    • கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல்-பழனி ரோட்டில் சவரிக்காடு பகுதியில் கடந்த மாதம் கொட்டி தீர்த்த கனமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாலையில் சீரமைப்பு பணிக்கு பிறகு இலகுரக வாகனங்கள், பஸ், லாரிகள் இயக்கப்பட்டன. தற்போது கடந்த 2 நாட்களாக பழனி மற்றும் கொடைக்கானலில் பெய்த கன மழை காரணமாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தற்போது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மீண்டும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி செங்குத்தாக உள்ளது. இதில் மண் மூட்டைகள் சரிந்துள்ளன. இவை 2 நாட்களுக்குள் சரிசெய்யப்படும். பணிகள் எச்சரிக்கையாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிரந்தரமாக கான்கிரீட் சுவர் அமைத்தால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டாது. இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருச்சி ரோடு, மெயின்ரோடு, நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தீபாவளி பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிய மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    திண்டுக்கல் 56.2, பழனி 46, சத்திரப்பட்டி 10.4, நத்தம் 30, நிலக்கோட்டை 8, வேடசந்தூர் 44.5, காமாட்சிபுரம் 51, கொடைக்கானல் போட் கிளப் 31.2, ரோஸ்காடன் 28 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 349.8 மி.மீ மழை அளவு பதிவானது.

    • சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்துவருகிறது.
    • சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.

    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை சென்ட்ரல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், வளசரவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.

    • புனே நகரில் பெய்த கனமழையால் மக்கள் நரக வேதனை அனுபவித்தனர்.
    • இதற்காக புனே மக்களிடம் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இந்த மழையால் புனே நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. புனே மாவட்டத்திலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. குறிப்பாக புனே நகரில் உள்ள மகர்பாடா பகுதியில் 11.6 செ.மீ. மழையும், சிவாஜிநகர் பகுதியில் 10.4 செ.மீ. மழையும் பெய்தது. புனே நகர மக்களுக்கு இந்த மழை நரக வேதனையை கொடுத்தது.

    இந்நிலையில், புனே மாவட்ட பொறுப்பு மந்திரியான சந்திரகாந்த் பாட்டீல் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், புனே நகர் மற்றும் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் பட்ட வேதனைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விரிவான திட்டம் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.

    • பல்வேறு மாவட்ட ங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்த மான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 22- ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, வானமாதேவி, வடக்குத்து, லால்பேட்டை, எஸ் ஆர். சி, குடிதாங்கி, கீழ் செருவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவல கம் பகுதியில் மட்டும் 2.8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் இடி மின்னலுடன் மழைபெய்த காரணத்தினால் மின்தடை ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு நெல்லிக்குப்பம் பகுதியில் மின்சார சப்ளை வழங்கினர். மேலும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிதம்பரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நடவடி க்கையும் மேற்கொண்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் வருகிற 26 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்த ப்பட்டு வருகின்றது இது மட்டும் இன்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்காத வகை யில் விவசாயிகளும் வேளாண்மை துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு:- கலெக்டர் அலுவலகம்- 28.0, எஸ்.ஆர்.சி குடிதாங்கி -20.0, கடலூர்- 16.4, வானமாதேவி-13.0, கீழ்செருவாய்-13.0, வடக்குத்து-8.0, லால்பேட்டை - 4.0, பண்ருட்டி - 2.0, மொத்த மழை - 104.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • மேலும் 3 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மேட்டூர், எடப்பாடி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 8.8. மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடி 7, காடையாம்பட்டி 2.5, சேலம் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 20.10 மி.மீ. மழை பெய்துள்ளது. இதற்கிடைேய சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (18-ந் தேதி) முதல் வருகிற 20 -ந் தேதி வரை மேலும் 3 நாட்கள் இடி, மின்ன லுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால்பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும்.
    • சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று தொடங்கி வரும் 19ந் தேதி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 12 சென்டிமீட்டரும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 11 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரி, மேமாத்தூர் பகுதிகளில் 10 சென்மீட்டர் மழை பெய்துள்ளது. 

    • குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிகளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது.
    • கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் கனமழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குமார பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிகளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது. மழையின் காரணமாக பள்ளியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், ஒலப்பாளையம் பகுதி, கத்தேரியில் மழை யின் காரணமாக ஏரியில் நீர் நிரம்பியதால் நீர் முழுவதும் அப்பகுதியில் உள்ள வாய்கால்களில் வெளியேறுவதை பார்வை யிட்டு ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றுமாறு வருவாய் மற்றும் பொதுப்ப ணித்துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, குமார பாளையம் தாசில்தார் தமிழரசி,ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன், தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, சிவகாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சாத்தான்குளத்தில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 47 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன.

    சாத்தான்குளத்தில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையினால் அங்குள்ள பழைய பஸ் நிலையம் அருகில் அரசு கிளை நூலகத்தின் உள்ளே மழை நீர் புகுந்து தேங்கியது.

    இதேபோல் தட்டார்மடம், பன்னம்பாறை, பேய்க்குளம் பகுதியிலும் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 72.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விளாத்திகுளம், தூத்துக்குடி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடம்பூர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. முறப்பநாடு பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அப்போது நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மனைவி சுப்புலெட்சுமி(55) என்பவர் முறப்பநாடு அருகே சென்னல்பட்டியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுப்புலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். நேற்று மாலையில் காடல்குடி, கீழ அரசடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கன்னடியன், மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 21.2 மில்லிமீட்டரும், அணை பகுதியில் மணிமுத்தாறில் 10.3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாநகர பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 47 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ஆய்க்குடியில் 10.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டியது.

    ×