என் மலர்
நீங்கள் தேடியது "tag 96178"
- உயிரிழந்த 4 தொழிலாளர்கள அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள்.
- அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே நிசார்பூரில் கனமழையால் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடியாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர குழுவினர் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரும் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் என்றும், கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் பின்னர் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் நந்தினி காகதி கூறியதாவது:-
வீட்டில் நான்கு கூலித்தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மண் சரிவு வீட்டிற்குள் புகுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து உள்ளூர் வாசிகளிடம் இருந்து தகவல் தெரியவந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டன. இதில் மூன்று பேர் துப்ரிசையச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கோக்ரஜாரைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பரமத்திவேலூர்:
பெங்களூர் சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.
சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவில் அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் வந்துள்ளார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்தார்.
திடீரென ஸ்ரீதர் மட்டும் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் ஸ்ரீதரை தேடியனர்.
நேற்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஸ்ரீ தர் உடலை ராஜா வாய்க்காலின் படித்துறைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்துஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நள்ளிரவு 12 மணி அளவில் ஆம்னி பஸ் நான்குவழிச்சாலையில் சென்றது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி எதிர்புறமாக நெல்லைக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் கவிழ்ந்தது.
கயத்தாறு:
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது.
பஸ்சை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்த பாண்டி(வயது 32) என்பவர் ஓட்டிச்சென்றார். பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நள்ளிரவு 12 மணி அளவில் ஆம்னி பஸ் நான்குவழிச்சாலையில் சென்றது. அங்குள்ள அரசன்குளம் பகுதியில் சென்றபோது திடீரனெ பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி எதிர்புறமாக நெல்லைக்கு வாகனங்கள் செல்லும் சாலையில் கவிழ்ந்தது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு நேரம் என்பதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள புத்தன்கடையை சேர்ந்த ஜீசஸ் ராஜன்(வயது 47), நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளையை சேர்ந்த சிவராமன்(28) ஆகிய 2 பேரும் பஸ்சுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தனர்.
பஸ் டிரைவரான பாண்டியின் கை மற்றும் கால்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் பாண்டி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் பாண்டி உயிரிழந்தார்.
இதற்கிடையே விபத்துக்குள்ளான பஸ்சின் இடிபாடுகளில் இருந்து குழந்தைகள், பெண்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நெல்லை, கோவில்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சென்னை புதுப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த குமார்(36), குரோம்பேட்டையை சேர்ந்த விநாயக்(30), செங்கல்பட்டை சேர்ந்த யுகந்தி(30), திருவட்டாறு புத்தன்கடையை சேர்ந்த விக்டர்(51), மாணிக்கநகரை சேர்ந்த சூரியபிரகாஷ்(25), மாதாங்கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்(32) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஜாம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.
- சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் நீர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு ஜம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.
அப்போது பூங்காவில் படகு சறுக்கி விழுந்ததில் ஜானி குவைத் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், " பொழுதுபோக்கு சவாரியின் நீர் சறுக்கும் படகு ஜானியின் தலையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ள நர்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அங்கிருந்து காட்சிலா சதார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஜானி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என்று கூறினர்.
சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நீர் பொழுதுபோக்கு பூங்காவின் மேலாளரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளோம். அதை இயக்குவதற்கான சரியான ஆவணத்தைக் கூட நீர் பூங்கா ஆணையத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
- குளித்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் மூச்சு திணறி நீரில் மூழ்கினார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
சென்னை மேற்கு மாம்பலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48).இவர் சென்னையில் ஒரு கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் குடும்பத்துடன் குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.நேற்று அவர் குடும்பத்துடன் கடியபட்டணம் வள்ளியாற்றில் குளிப்பதற்கு சென்றார்.
மனைவி மற்றும் 2 பிள்ளைகளும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குளித்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் மூச்சு திணறி நீரில் மூழ்கினார்.உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்க்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.
இது குறித்து அவரது மனைவி அனந்த செல்வி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள சாணத்திகல்மேட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவகாமி (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சிவகாமி இரவு தனது வீட்டின் அருகே ரோட்டை கடந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் எதிர்பாராத விதமாக சிவகாமி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் சிவகாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மாபேட்டை:
சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.
அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டம் கஜூவா கிராமத்தில் உள்ள ஃபதேபூர்- கோரக்பூர் சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்கான லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் ரவி ஸ்ரீவஸ்தவா (40), வந்தனா ஸ்ரீவஸ்தவா (70), ரத்தன் ஸ்ரீவஸ்தவா (35), மற்றும் கார் டிரைவர் என அடையாளம் காணப்பட்டனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
- இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வையத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தர்மலிங்கம் (வயது45).இவர் சோழவந்தான் அருகே நகரி டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்தில் மின்மோட்டரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான அன்பு தர்மலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலியான டாஸ்மாக் ஊழியருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சசிதரன், ராகவி என்ற குழந்தைகளும் உள்ளனர்.
- பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து சுவரின் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள திவான்சா புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் மதன்குமார் (வயது 16). தீபாவளி பண்டிகையையொட்டி இவர் குப்பிச்சிபுதூரை சேர்ந்த தனது நண்பர் மாதேஷ் என்பவருடன் கோட்டூர் ரோடு அய்யா மடை பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு சிறுது நேரம் இருந்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மாதேஷ் ஓட்டி வந்தார்.
மதன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுபோட்டை இழுந்து அந்த பகுதியில் இருந்த சுவரின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மதன்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதன்குமார் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.