search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காடு"

    ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 

    இந்த மலர்க்கண்காட்சியில் மேட்டூர், அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கம் அருகே அனைத்து துறையின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளையும் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும் என்றார்.  

    இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளை நிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றார்.

    விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளும்.ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூர் மலைவாழ் மக்களுக்கும்,உள்ளூர் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார். 

    திறப்புவிழா நிகழ்ச்சியில் அண்ணாபூங்கா ஊழியர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம் போட்டோ எடுத்துக்கொண்ட காட்சி.

    இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ் ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளர் டி.எம்.செல்வகணபதி. ஏற்காடு ஒன்றிய பொருப்பாளர் தங்கசாமி,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாலு, கிளை செயலாளர்கள் ஆட்டோ ராஜா, குணசேகரன்,வைரம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார்.மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    ஏற்காடு கோடைவிழா மலர்கண்காட்சியில் 5 லட்சம் பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்பட்டால் இருந்தது. இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி காட்சி படுத்தப்பட்டுள்ளுது. இதற்காக இங்குள்ள கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும் ஏறி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து .விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    சுற்றுலா பயணிகள் அமர 2 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்கின்றனர்.

    மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக இன்றும் நாளையும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரு வழி பாதையாக செய்யப்பட்டுள்ளது. . 4-வது நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    ஏற்காடு கோடைவிழாவை ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொேரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்படவில்லை.  இந்த ஆண்டு கடந்த 25-ந்  தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து, விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக்க சின்-சான் பொம்மை ,வள்ளுவர் கோட்டம்  போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    சுற்றுலா பயணிகள் அமர இரண்டு குடில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

    படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர் கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பபட்டது. இதை சமாளிக்க சேலத்தில் இருந்து ஏற்காடு வரும் வாகனங்கள் திரும்பி செல்ல குப்பனூர் வழியாக திரும்பி விட பட்டனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லவும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

    நேற்று குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 6-ம் நாளான இன்று பல்வேறு துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45- வது  கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ெதாடர்ச்சியாக 8 நாட்கள் நடத்தப்பட்டது.   முதல் நாளான கடந்த  25-ந் தேதி (புதன்கிழமை)  அன்று கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

    கோடை விழாவின் 7-வது நாளான நேற்று ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெடல் படகு போட்டியும், படகோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

    போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

    8-வது நாளான இன்று (புதன்கிழமை) கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நிறைவடைந்தது. காலை 11 மணிக்கு  விளையாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி,  பிற்பகலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக  இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது.
    விழா நிறைவு நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.   விழாவுக்கு சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  

    சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பெரும்பாலானவர்கள் மலர் சிற்பங்கள், பழ உருவங்கள் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.   அதுபோல் மலர்கள் முன்பாக தங்கள் பெற்றோரை மழலைகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஏரியில் படகு சவாரி  செய்து மகிழ்ந்ததோடு, மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். காய்கறிகளால் ஆன காட்டெருமை, விமானம்,  அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீருற்று, மலர்களால் வடிவமைக்கப்பட்ட   மேட்டூர் அணை, பெண்களுக்கான இலவச பஸ், மாட்டு வண்டி, சின்-சான் பொம்மை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோடை விழா- மலர் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு துறைகள் சார்பில் பல்வேறு கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

    இதில் சிறந்த கண்காட்சி அரங்கங்கள் எவை? என தேர்வு செய்யப்பட்டு, அந்த அரங்கங்களுக்கு சேலம் மாவட்ட  கலெக்டர் கார்மேகம்  சான்றிதழ்கள் வழங்கினார்.  மேலும் அரங்கங்களை சிறப்பாக அமைத்த  துறை அலுவலர்களையும் பாராட்டினார்.

    விழா நிறைவு நாளான இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட சிறப்பு பஸ்கள் அதிக எண்ணிக்கையில்  விடப்பட்டன. அதுபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், ஏற்காடு அடிவா ரத்திற்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    ×