என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 98443"

    பால் வியாபாரி தற்கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    புதுச்சத்திரம் அருகே உள்ள ராமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம்அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தி லுள்ள அணைக்கரை அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில்மி கவும் பிரசித்தி பெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வருகின்றனர். காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் மண்டகப்படி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    அப்போது ஒழுகச்சே ரியை சேர்ந்த புது தெரு சந்திரகாசு மனைவி சரஸ்வதி (வயது 50) என்ற பெண் தீ குண்டத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை
    • செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே குழித்துறை ஆத்துக்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்துவதாக வந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த மினி வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி னர். டிரைவர் தப்பி ஓடி விட்ட நிலையில் போலீசார் வேனை சோதனை செய்த போது அனுமதியின்றி செம்மண் கடத்துவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மினி வேனையும் பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து சிதறால் செல்வராஜ். பத்துகாணி வினோத், மடிச்சல் திலீப் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் செம்மண் அள்ள பயன்படுத்திய எந்திரம் யாருடையது?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கிடாத்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி மகள் புவிதாரணி (வயது 16). இவரது தாய் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், கிழவன் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    அதனை திருப்பி கொடுக்காததால் 2 பேரும் புவிதாரணி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த டி.வி. மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

    இதனை புவிதாரணி தடுக்க முன்றதால் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் கையில் காயம் அடைந்த புவிதாரணி பேரையூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
    • இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வையத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தர்மலிங்கம் (வயது45).இவர் சோழவந்தான் அருகே நகரி டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்தில் மின்மோட்டரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான அன்பு தர்மலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி பலியான டாஸ்மாக் ஊழியருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சசிதரன், ராகவி என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    • திருப்பரங்குன்றத்தில் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
    • அதனை யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 40). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு 3-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யாழ் இசைவேந்தன் என்று பெயர் சூட்டினர்.

    இந்த நிலையில் சித்ரா பள்ளிக்குச் சென்ற தனது மூத்த மகனை அழைத்து வர நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்டார். குழந்தை யாழ் இ்சைவேந்தன் தூங்கிக் கொண்டிருந்ததால் அவனை தொட்டிலில் படுக்க வைத்து வீட்டை பூட்டி விட்டுச் சென்றார்.

    பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சித்ரா தொட்டிலில் படுக்க வைத்திருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினார். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

    இரவு 7 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் தனது மாடி தண்ணீர் தொட்டியில் நீர் நிறைந்து விட்டதா? என பார்க்க சென்றபோது தொட்டியில் குழந்தை பிணம் கிடப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குழந்தை மர்மமாக இறந்துள்ளதால் அதனை யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    • ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

    கோவை

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்( வயது 72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர் (54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததார்.

    இந்நிலையில், ராமச்சந்திரன் ரூ. 100 கோடி மதிப்பிலான தனது ஆஸ்பத்திரிையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேரையும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரிடமும் தனித்தனியாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. 

    • பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
    • புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்குசெட்டிபாளையம் கிராமத்தைசேர்ந்தவர் ராஜா. இவரதுமனைவிகாயத்ரி, இவர்களுக்கு 2மகள்கள் கோபிகா,தேஜா உள்ளனர். காயத்ரி தனது 2 மகளுடன் கடந்த29 -ந் தேதி திடீரென்றுகாணாமல் போனார் . பல இடங்களில் தேடிஎங்கும் கிடைக்காததால் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

    இதுபற்றி புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தார். பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். போலீசாரின்தீவிர முயற்சியினால் 2மகளுடன் காயத்ரியை மீட்டனர். அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் இதனால் அவரது குடும்பத்தினர் மகழ்ச்சி தெரிவித்தனர்.

    • காரில் இருந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • சிலிண்டரை தவிர வேறு எதுவும் பொருட்கள் இருந்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.

    கோவையில் கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் பலியான இடத்தை போலீஸ் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சாலையில் வந்த கார் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. காரில் வந்த நபர் பலியாகி உள்ளார். அவர் குறித்து அடையாளம் தெரியவில்லை. அவர் குறித்து விசாரித்து வருகிறோம்.

    கோவிலுக்கு அருகில் உள்ள சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவில் அருகே நடைபெற்றதால் அதிக கவனம் செலுத்துகிறோம். இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்பது விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும்.

    இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் இருந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். என்னென்ன பொருட்கள் காருக்குள் இருந்தது என ஆய்வு செய்து வருகின்றனர். சிலிண்டரை தவிர வேறு எதுவும் பொருட்கள் இருந்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து வருகிறோம். இறந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான முழுமையான விவரம் மாலையில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கணவர் இறந்த 1 மாதத்தில் இளம்பெண் மாயமானார்.
    • சுகன்யாவின் தாய் சரோஜா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பொய்கைஅரசூர் பகுதியை சேர்ந்தவர் காந்திராஜ். இவரது மனைவி சுகன்யா. காந்திராஜ் கடந்த 30-ந் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் சுகன்யா தனியாக 2 குழந்தைகளுடன் இருவேல் பட்டு பகுதியிலுள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மாலை சுகன்யா வீட்டிலிருந்து வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சுகன்யாவின் தாய் சரோஜா சுகன்யாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் சுகன்யா கிடைக்கவில்லை. இது குறித்து சுகன்யாவின் தாய் சரோஜா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் தெரிவி த்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுகன்யா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாரா ணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார்‌.
    • திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா (வயது 24). விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.பி படித்து வந்தார். சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாராணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார்‌. அப்போது அவரது தாய் உமாராணி பணம் என்னிடம் இல்லை நாளை தருகிறேன் என கூறினார்‌. இதனால் மன வருத்தத்தில் இருந்த சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தனது தாய் உமாராணிடம் தெரிவித்தார்.

    அதிர்ச்சி அடைந்த உமாராணி உடனடியாக தனது மகள் சந்தியாவை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர்சுப்பிரமணி (வயது 60). விவசாயி. இவர் சில தினங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் ஊர் அருகே உள்ள மாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காலையில் விவசாய நிலத்துக்கு சென்றபோது கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்ப தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர்.

    தகவலின் பெயரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி மேகலை, பிரபாகரன், தனிபிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறை நிலை அதிகாரி சுரேஷ்பாபு தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×