என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பா.ஜ.க."
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலை தாங்கினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே குடும்பம் என்ற தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வினர் ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
தி.மு.க. முரண்பாடுகளைக் கொண்ட கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 1947-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் 5.5 கோடி கழிப்பிடங்கள்தான் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்மூலமாக 56 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மட்டும் கடந்த 2021-22-ம் ஆண்டில் தமிழகத்தை விட 8 மடங்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. தமிழகத்தில் தொழில்தொடங்க வரும் அந்நிய முதலீட்டாளர்களிடம் 30, 40 சதவீத கமிஷன் தொகையை கேட்கின்றனர்.இதன் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக முதல்வர் தெரிவித்ததுடன், அண்ணாமலை அரசியல் செய்வதாக தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 நாட்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளதே சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு எடுத்துக்காட்டாகும்.
பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளில் செய்த சாதனைகளால் தான் என்னால் மேடையில் தைரியமாக பேசமுடிகிறது. இந்த 8 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் ஒரு துறை அமைச்சரின் மீது அலுவலக குண்டூசி திருடியதாகக்கூட புகார் தெரிவிக்க முடியவில்லை. அதே வேளையில், திராவிட மாடல் ஆட்சியில் ஒரு ஆண்டுகூட முடியாத நிலையில் தற்போது நாக்கு தள்ளுகிறது.
ஆகவே பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதான ஊழல் பட்டியல், ஊழல் புகார்கள், ஊழல் ஆதாரங்களை ஜூன் 5-ந்தேதி காலையில் மதுரையில் இருந்து வெளியிட தொடங்குவார்கள் என்றார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன், மாநிலச்செயலாளர் மலர்க்கொடி, செய்தித்தொடர்பாளர் கார்வேந்தன், விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ருத்ரகுமார், மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மத்திய பா.ஜ.க. அரசின் 8 ஆண்டுகால சாதனை குறித்த கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே மோடியின் நோக்கம். எல்லையில் இருந்த தீவிரவாதம் தற்போது ஒடுக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. 600 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. 8 ஆண்டில் புதிதாக 6.35 லட்சம் பள்ளி துவக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி தந்துள்ளார்.15 எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல், அதில் 10 நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த 8 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 லட்சம் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர்.
3.2 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.316 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.418 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தகம் செய்துள்ளது.ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
அதேபோல் ஏழை மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் திட்டம் இந்த ஆட்சியில்தான் வழங்கப்பட்டு வருகிறது.மோடியின் ஆட்சியில் தான் மக்கள் நலத்திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு கிடைத்து வருகிறது. வாஜ்பாயின் கனவை மோடி நிறைவேற்றி வருகிறார்.அதேபோல் தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்டு கட்சியினருக்கு மோடி எதை செய்தாலும் அதனை குறை சொல்வது தான் அவர்களுக்கு வழக்கம். ஒரே ரேஷன் திட்டத்தைக் கொண்டு வந்தபோது அதனை குறை கூறினார்கள். ஆனால் அது இன்று சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்