என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tambaram Train"
- செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு வாரத்திற்கு மும்முறை ரெயில் இயக்கப்படுகிறது.
- நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் கடந்த 3 மாதங்கள் இயங்கி தென்னக ரெயில்வேக்கு நல்ல வருமானம் கொடுத்தது
தென்காசி:
இந்திய ரெயில்வே கால அட்டவணை சந்திப்பின்போது செங்கோட்டை-தாம்பரம் இடையே புதிய ரெயில்கள் இயக்கம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது.
அதில் அளிக்கப்பட்ட பதிலில் செங்கோட்டையிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு செங்கோட்டை வந்தடையும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் செங்கோட்டையிலிருந்து, தென்காசி, அம்பை, நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும்.
அதாவது அம்பை, அருப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை இந்த மூன்று ரெயில் வழித்தடங்களின் சென்னை ரெயில் கோரிக்கைகளை ஒரே ரெயிலில் நிறைவேற்ற அட்டவணை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தென்மாவட்ட பயணியர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அம்பை ரெயில் வழித்தட பயணிகளிடையே நல்ல வரவேற்்பை பெற்ற, 2020-ம் ஆண்டு முன்மொழிவு செய்யப்பட்ட நெல்லை-தாம்பரம் வழி அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ரெயில் கோரிக்கை நிலுவையில் உள்ளது.
மேலும் இந்த நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் கடந்த 3 மாதங்கள் இயங்கி தென்னக ரெயில்வேக்கு நல்ல வருமானம் கொடுத்தது.
இதுகுறித்து தென் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி அந்தோணி கூறுகையில், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடங்கள் அனைத்தும் மின்மயமாக்கல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
அம்பை ரெயில் வழித்தட பயணிகளின் நலன் கருதி அதிகபட்சம் 12 மணி நேரத்தில் சென்னை செல்லும் வகையில் இயங்கிய நெல்லை-தாம்பரம் ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே முன்வரவேண்டும். மேலும் 16 மணி நேரம் சென்னை செல்வதற்கு பயணிகள் விரும்பமாட்டார்கள்.
தாம்பரத்திலிருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் செல்லும் ரெயில் வழித்தடத்தின் வழியாக இந்த வாரம் மும்முறை ரெயிலை இயக்கினாலும் பரவாயில்லை. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாலை 7 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு தென்காசி வழியாக மறுநாள் காலை 7 மணிக்கு தாம்பரம் செல்லும் வகையில் அட்டவணை ஏற்படுத்தப்பட்டு ரெயில் இயக்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்