search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Dream Shows"

    • நடப்பு கல்வியாண்டில் 8 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் மதுரை கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மை யானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழு மையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்திடும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

    மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 4 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 8 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், மொழியில் உயர்ந்த மொழி, தாழ்ந்த மொழி என எதுவும் இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. நமது தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் பெற்று கற்றறிந்த சமூகமாக வாழ்ந்தோம் என்பதை கீழடி அகழ்வாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களின் ஆய்வின் அடிப்படையில் நாம் அறிய முடிகிறது.

    சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தமிழ் சொற்கள் இன்றளவும் சாமானிய மக்களின் பேச்சு வழக்கில் உள்ளன. மதுரையை சுற்றி 20 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் 20 இடங்களில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய கல்வெட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகைய தொன்மையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகராக மதுரை விளங்குகிறது என்றார்.

    ×