search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu election"

    • தமிழக தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி உயரவில்லை.
    • அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்.

    கோவில்பட்டி:

    சென்னை-நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று ரெயில்வே துறை அறிவிப்பினை வெளியிட்டது. இந்நிலையில் இதற்கு முயற்சி எடுத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க. மற்றும் லைன்ஸ் கிளப் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மையப்படுத்தி தான் என்றுமே தமிழக அரசியல் உள்ளது என்பதற்கு அடையாளம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளதற்கு சான்று. ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயர், படத்தை பயன்படுத்துகிற நிலைக்கு வந்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக அவரது புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர்.


    டி.டி.வி.தினகரனுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த தொடர்பும் இல்லை. அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே ஜெயலலிதாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும். தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். அண்ணாமலைக்காக அல்ல. அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு பொருட்டே அல்ல.

    தமிழக தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி உயரவில்லை. 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்கு வங்கியை கூட பா.ஜ.க.வால் தாண்ட முடியவில்லை. அவ்வப்போது அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×