search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Student"

    • மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
    • மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.

    டெல்லி துவாரகாவில் உள்ள சட்டப்பல்கலைக்கழக விடுதியில், தமிழக மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று மாணவி எழுதி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படிப்பு சம்பந்தமாக மாணவி ஒருவித பதற்றத்தில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

    மன உளைச்சலில் இருந்த மாணவியை கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் ஒரு வாரத்திற்கு பின் டெல்லிக்கு அனுப்பியுள்ளனர்.

    ஐ.ஐ.டி. மற்றும் நீட் தேர்வு பயிற்சிக்காக 10-ம் வகுப்பு முடித்ததும் மேற்படிப்புக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா சென்று படிக்க தமிழக மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.#NeetExam #JEEAdvance

    சென்னை:

    ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்க வேண்டும், எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பது பல தமிழக மாணவர்களின் கனவாக உள்ளது.

    இதற்கு போதிய பாடத் திட்டங்களும், பயிற்சியும் அவசியம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்த வரை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மொத்தம் 6 பாடங்கள் வைக்கப்படுகின்றன. முதல் மொழிப் பாடம், 2-ம் மொழிப்பாடம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் என 6 பாடங்களை தமிழக மாணவர்கள் படித்தாக வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்தாலும் 6 பாடங்கள்தான்.

    ஆனால் ஆந்திரா-தெலுங்கானாவில் பிளஸ்-2 வகுப்புக்கு 5 பாடங்கள் மட்டுமே. ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே அவர்கள் படிக்கின்றனர். மேலும் பெரும்பாலான பள்ளிகளில் ஐ.ஐ.டி. சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளன.

    வகுப்பில் பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.

    எனவே ஐ.ஐ.டி. கனவில் இருக்கும் மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆந்திரா- தெலுங்கானாவில் பொது அறிவை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பொது நுழைவுத் தேர்வு ஒன்றையே மையமாக வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதால் தமிழக மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் கலாசாரம் சில ஆண்டுகளாக பெருகி வருகிறது.

    பெரும்பாலான தமிழக மாணவர்கள் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக பெற்றோரும் ஆந்திரா- தெலுங்கானா சென்று குடியேறுகிறார்கள்.

    அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட என்ஜினீயரிங் தர வரிசைப் பட்டியலில் 8-வது இடம் பிடித்த என்.ஏ.நிஷா, 9-வது இடம் பிடித்த எஸ்.நிதிஷ்குமார், 10-வது இடம் பிடித்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் ஆந்திராவில் பிளஸ்-2 வரை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாணவர் நிதிஷ்குமார் ஐதராபாத் நாராயணா ஜுனியர் கல்லூரியில் 9-ம் வகுப்பில் இருந்து படித்து வருகிறார். 4 ஆண்டுகள் அங்கு படித்து முடித்த நிலையில் மும்பை ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

    அவரது தாய் உஷா கூறுகையில், “நான் மகன் படிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி இருக்கிறேன். எனது கணவர் செல்வராஜ் இங்கு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். எனது மகனை ஐ.ஐ.டி.யில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான பயிற்சி இங்கு அளிப்பதால் சேர்த்தோம்” என்றார்.

    ஆந்திராவில் படித்த மற்றொரு மாணவரான மணிகண்டன் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பதியில் நாராயணா குரூப் பள்ளியில் படித்தார்.

    இதே போல் மாணவி நிஷா திருவள்ளூர் மாவட்டம் கொடி வளசல் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவின் புத்தூரில் படித்தவர்.

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் 2-வது இடம் பிடித்த மாணவர் ராஜ்செந்தூர் அபிஷேக் விஜயவாடாவில் படித்தவர்.

    மாணவர்கள் கூறும் போது, ஆந்திராவில் நுழைவுத் தேர்வை மையமாக வைத்து பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது ஐ.ஐ.டி. மருத்துவம், என்ஜினீயரிங் போன்றவற்றில் சேர வசதியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

    இதுபற்றி தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடங்களின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க வேண்டும், இல்லையெனில் ஆந்திராவில் படித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர். #NeetExam #JEEAdvance

    நீட் தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் அகில இந்திய அளவில் பீகார் மாணவி கல்பனா குமாரி முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 12-ம் இடத்தை பிடித்தார். #NeetResult #NEETResult2018 #NEETexam
    சென்னை:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

    cbs-e-r-esults.nic.in,

    www.cbs-e-n-eet.nic.in,

    www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியானது.

    ‘நீட்’ தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் ஆண்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 399 பேரும், பெண்கள் 4 லட்சத்து 2 ஆயிரத்து 162 பேரும், திருநங்கை ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 27 ஆயிரத்து 575 பேர். ஆதிதிராவிடர்கள் 87 ஆயிரத்து 311 பேர். பழங்குடியினர் 31 ஆயிரத்து 360 பேர். பொதுப்பிரிவினர் 2 லட்சத்து 68 ஆயிரத்து 316 பேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதியதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    பொதுப்பிரிவினருக்கு 119 மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் பிரிவினருக்கு 96 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்கள் ஆகும்.

    இந்தியாவில் நீட் தேர்வில் கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தை ரோகன் புரோகித் என்ற மாணவர் பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவர் 690 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 3-ம் இடத்தை டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷு சர்மா என்ற மாணவர் பிடித்துள்ளார்.

    ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு மேலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ரேங்க் பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் மாணவர்களே அதிகம் பேர் இடம்பெற்று உள்ளனர். முதல் 50 இடங்களில் 8 இடங்களை டெல்லி கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக குஜராத் 7 இடங்களையும், ஆந்திரா 5 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் 518 பேர் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 324 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் எழுதினார்கள். இதில் 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 39.56 ஆகும்.

    புதுச்சேரியில் இருந்து 4 ஆயிரத்து 573 பேர் விண்ணப்பித்தனர். 4 ஆயிரத்து 462 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1,768 பேர் தகுதி பெற்றனர். இது 39.62 சதவீதம் ஆகும்.

    சென்னை மாணவி கே.கீர்த்தனா தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 12-வது இடத்தை பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்கள் 676.

    மருத்துவ படிப்புக்கான இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போய்விடும். 85 சதவீத இடங்களுக்கு அந்தந்த மாநிலங்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தும். மேலும் விவரங்களுக்கு www.mcc.nic.in எனும் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். #NeetResult #NEETResult2018 #NEETexam
    ×