search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu will stand against it"

    • காட்பாடியில் முத்தரசன் பேட்டி
    • தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது.

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட கோரிக்கை மாநாடு இன்று நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் சிவக்குமார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தி.மு.க. அரசிற்கும், கூட்டணி கட்சியினருக்கும் கண்டனம் தெரிவித்தார்.

    தமிழகமே எதிர்த்து நிற்கும்

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதைப் பேச வேண்டுமோ அதை தான் பேசி வருகிறார். தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது.

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் சிவகுமார் அரசியல் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மேகதாது அணையை கட்டியே தீர்வேன் என கூறி வருகிறார்.

    அது எப்படி கட்ட முடியும். அரசியலுக்காக இதுபோன்று பேசி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க வேண்டாம். ஒருபோதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கு தமிழகமே எதிர்த்து நிற்கும்.

    தடையின்றி கொடுக்க வேண்டும்

    தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கொடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை கர்நாடகா அரசு மதித்து செயல்பட வேண்டும்.

    தமிழகத்திற்கான பங்குகளை கர்நாடகா அரசு வழங்க வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×