என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tanjore accident"
திருச்சியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி திருத்துறைப்பூண்டி நோக்கி புறப்பட்டது. அந்த மினி லாரி இன்று அதிகாலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் அருகே வந்தபோது முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மினிலாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக போலீசார் சென்று மினிலாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த கரந்தை கொடிக்காலூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 43). இவர் போல்வெல் போடும் வாகன டிரைவராக உள்ளார். இந்த நிலையில் பால்ராஜ் சம்பவத்தன்று தஞ்சை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில் பத்துக்கட்டு என்ற பகுதியில் ஒரு வீட்டில் போர் வெல் போடுவதற்காக வாகனத்தை ஓட்டி சென்றார்.
அப்போது வீட்டின் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மூர்த்தி அம்பாள்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சதிஷ்குமார் (வயது 26). கூலி தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது முன்னால் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சதிஷ்குமார் முன்னாள் சென்ற சைக்கிளை பார்த்தவுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மணத்திடல் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 73). கூலி தொழிலாளி.
இவர் நேற்று மணத்திடல் பாலத்தில் இருந்து வளப்பக்குடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சேவியர் மீது மோதியது. இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து நடுக்காவிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, பள்ளியக்ரகாரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 50). சுமை தூக்கும் தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் வேலை முடித்து கொண்டு பள்ளியக்ரகாரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை அருகே உள்ள கோடியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் இவரும் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் முத்தலீப். இவருடைய மகன் சாதிக்பாட்சா (வயது35). அதே பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா மகன் ஜெய்லானி (வயது38). இவர்கள் இருவரும் சமையல் வேலை செய்து வந்தனர்.
நேற்று இரவு சாதிக்பாட்சாவும், ஜெய்லானியும் ஒரு மொபட்டில் பண்டாரவாடையிலிருந்து அய்யம்பேட்டை கடைத்தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மொபட்டை ஜெய்லானி ஓட்டினார்.
இவர்கள் இருவரும் நெடுந்தெரு பள்ளிக்கூடம் அருகில் சென்ற போது எதிரில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சாதிக்பாட்சா, ஜெய்லானி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்