search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanjore road work"

    தஞ்சை-நாகை சாலையில் பூண்டியில் இருந்து அமைக்கப்பட்ட புறவழிச் சாலை பணி தொடராமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட மக்கள் நலப்பேரவையின் ஆகஸ்டு மாத கூட்டத் பேரவையின் தலைவர் பொறியாளர் தங்கராசன் தலைமையில் நடைபெற்றது.

    ஆர்.பழனிசாமி வரவேற்று பேசினார். செயலாளர் மா.பாலகிருஷ்ணன் மாதாந்திர அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராமச்சந்திரன் மாதாந்திர வரவு-செலவு அறிக்கையை சமர்பித்தார்.

    தஞ்சை மாநகராட்சி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. போக்குவரத்து காவல்துறை செயல்பாடும் திருப்தியாக இல்லை. அண்ணா சாலையில் ராமநாதன் மன்றம் ஓரமாக இருக்கும் நடைமேடையில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வரும் டாக்சி நிறுத்தத்தை அகற்ற வேண்டும். சம்பந்தமில்லா இடங்களில் ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றும் மாநகராட்சி நிர்வாகம் இதனை அகற்றி மக்கள் நடைமேடையை பயன்படுத்த வழிவகுக்க வேண்டும்.

    தஞ்சை-நாகை சாலையில் பூண்டியில் இருந்து அமைக்கப்பட்ட புறவழிச் சாலை பணி தொடராமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் சாலியமங்கலம்-பாபநாசம் சாலையை இணைக்கும் புறவழிச்சாலையும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலை பணியை செய்து முடிக்க வேண்டும்.

    கரந்தை பகுதி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், காலை மாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டும், அல்லது பூக்குளம் வலம்புரி பகுதி வழியாக வெண்ணாற்றங்கரை செல்லும் சாலையை விரிவுப்படுத்தி போக்கு வரத்தை அவ்வழியாக முறைப்படுத்திட வேண்டும். மேலும் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் சாலையைத் தவிர மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சாலைகள் மிக மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதை உணர்ந்து ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    ×