என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tanjore siddha doctor"
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் இயங்கி வரும் ராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த மருத்துவமனை வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது.
இங்கு பிரசவ பிரிவு, கண், பல், குழந்தைகள் நலம் ஆகிய 4 பிரிவுகளும், மாவட்ட சித்த மருத்துவ துறையின் கீழ் செயல்படும் சித்த மருத்துவ மனையும் இயங்கி வருகின்றன.
சித்த மருத்துவமனை 1995-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, இருமல், மூலம், உடல் சோர்வு, உடல் வலி, மூட்டு வலி, தோல் நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் நிலவேம்பு குடிநீர் வைக்கப்பட்டு நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த மருத்துவமனை ஆரம்பித்தது 10 ஆண்டுகளாக நிரந்தர சித்த மருத்துவர் நியமிக்கப்பட வில்லை. இதையடுத்து கடந்த 2015-ல் நியமிக்கப்பட்ட ஒரு சித்த மருத்துவரும் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் பணி ஓய்வு பெற்று சென்று விட்டார். தற்போது மீண்டும் கடந்த 2 ஆண்டுகளாக நிரந்தர மருத்துவர் ஒருவரை மாவட்ட சித்த மருத்துவத் துறை நியமிக்காமல் இருந்து வருகிறது.
மருத்துவர் இல்லாததை சமாளிக்கும் விதமாக வெளியூர் மருத்துவர்கள் சிலரை கொண்டு வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு நிரந்தர மருத்துவர் நியமிக்கப் படாததாலும், வெளியூரிலிருந்து வரும் சித்த மருத்துவர்களும் மாறி மாறி வருவதாலும் நீண்டகால நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளும், மற்ற நாட்களில் சிகிச்சைக்காக வரும் வெளியூர் மற்றும் உள்ளூர் நோயாளிகளும் உரிய மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.
இதுகுறித்து தஞ்சை மேலவீதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதனால் பாதத்தில் உள்ள புண்ணும் ஆறாமல் அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனால் சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைக்கு அடிக்கடி வருகிறேன். ஆனால் இங்கு நிரந்தர மருத்துவர் இல்லாததால் எனக்கு சரிவர மருத்துவம் பார்க்க முடியாமல் நோய்கள் குறைந்த பாடில்லை.
இங்கிருந்து வேறு சித்த மருத்துவமனைக்கு செல்ல சுமார் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மருத்துவமனை மீது உரிய கவனம் செலுத்தி நோய்களின் நலன் கருதி உடனடியாக நிரந்தர சித்த மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றார். #Siddhadoctor
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்