search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac officials"

    • காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
    • அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் தெரிவிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் நடைபெற்றது.

    முதுநிலை மண்டல மேலாளர் நர்மதாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள், கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா பேசுகையில், `ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிந்துள்ளது, இதற்கு கள்ளச்சாராய விற்பனை தான் காரணமா என்று கடை மேற்பார்வையாளர்களிடம் கேட்டார்.

    அப்போது சில அதிகாரிகள் மழையின் காரணமாக விற்பனை குறைந்தாகவும், இன்னும் சிலர் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மற்ற பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டார்கள் அதனால் மது விற்பனை குறைந்து விட்டதாகவும் கூறினர்.

    தொடர்ந்து பேசிய நர்மதா தேவி , டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் சப்ளை செய்யும் நபர்கள் குறித்தும் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் மதுபான சில்லறை விற்பனை கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

    அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து மதுக்கூடங்களுக்கும் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் கட்டாயம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் மற்றும் கலால் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×