search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tata Steel"

    • நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.
    • ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது.

    இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட பலர் பங்கேற்று விளையாடினர்.

    இந்நிலையில், 18 சுற்றுகளின் முடிவில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.

    ஏற்கனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் முன்னாள் ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TataSteel #TataSteelManager
    பரிதாபாத்:

    அரியானா மாநிலம் பரிதாபாத்தில் டாடா ஸ்டீல் பிராசசிங் அண்ட் டிஸ்ட்ரிபியூசன் லிமிடெட் (டிஎஸ்பிடிஎல்) நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மூத்த மேலாளர் அரிந்தம் பால் நேற்று மதியம் தனது அறையில் வழக்கமான பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் ஊழியர் விஷ்வாஷ் பாண்டே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அரிந்தம் பாலை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    துப்பாக்கி சத்தம் கேட்டு தொழிலாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அரிந்தம் பால் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். கொலை செய்துவிட்டு தலைமறைவான விஷ்வாஷ் பாண்டே, 2015 முதல் டிஎஸ்பிடிஎல் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் மேலாளரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #TataSteel #TataSteelManager

    ×