என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Teachers distribute"
- அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் கூறி பிரசாரம் செய்யப்பட்டது.
- அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் ஈரோடு ஸ்டோனி பாலம், அண்ணா நகர், சாந்தாங்கருக்கு மற்றும் கிராமடை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இப்பிரசாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளான இலவச சீருடை, இலவச நோட்டு புத்தகங்கள், ஆங்கில வழிக்கல்வி மற்றும் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்து கூறியும்,
அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை வலியுறுத்தியும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதன் பயன்கள் போன்றவற்றை எடுத்துக்கூறியும் பிரசாரம் செய்யப்பட்டது.
மேலும் அது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
தற்போது எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தில் ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.