search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenagers are victims"

    • நேருக்கு நேர் மோதிக்கொண்டன
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள விருப்பாச்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் கலை அறிவியல் படித்து வந்தார்.

    இவருடைய உறவினர் பெயரும் கவுதம் (24). இருவரும் நேற்று திருவண்ணா மலையி லிருந்து கல்லாவி கிராமத்து க்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    செங்கம் அருகே உள்ள ரோடு கரியமங்கலம் பகுதியில் சென்றபோது ஓசூரில் இருந்து கும்பகோணம் நோக்கிச்சென்ற தக்காளி மற்றும் காய்கறி ஏற்றி வந்த லாரியும் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாண வர் கவுதமும், அவரது உற வினரான கவுதமும் படுகா யம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அக்க ம்பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் டாக்டர்கள் பரிசோதித்த போது இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்இன்ஸ்பெக்டர் பிரசாந்த் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்த கரண் (வயது 21), கணபதி நகரை சேர்ந்தவர் சரண்குமார் (22) மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவர்கள் மூவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை வாலாஜாபேட்டையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மெடிக்கல் பார்ம் வாங்குவதற்காக 3 பேரும் ஒரே பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது காவேரிப்பாக்கம் அடுத்த மலைமேடு அருகே வரும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் பாதையை மாற்றுவதற்காக வைத்திருந்த தடுப்ப கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கரண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பலத்த காயமடைந்த சரண்குமார் மற்றும் சுபாசை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிைலயில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×