என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » telangana police
நீங்கள் தேடியது "Telangana police"
தெலுங்கானாவில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்தமான 8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #BJP #ParliamentaryElections
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மத்திய மண்டல கமிஷனர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து ரூ.8 கோடி ரொக்க பணம் எடுக்கப்பட்டு ஒரு காரில் எடுத்து வரப்பட்டதாக தகவல் கிடைத்தது.
உடனே பறக்கும் படையினர் நாராயண்குடா போலீசாருடன் விரைந்து சென்று ஹிமாயத்யஹார் சந்திப்பில் மடக்கி சோதனை நடத்தினர். அந்த காரில் டிரைவர் குடாசங்கர் மற்றும் தோஷரெட்டி, பிரதீப் ரெட்டி ஆகிய 3 பேர் இருந்தனர்.
அவர்களிடம் ரூ.2 கோடி ரொக்கப்பணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் பா.ஜனதா கட்சிக்கு சொந்தமானது என்றும், நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் தங்களிடம் கொடுத்ததாகவும், பிரதீப் ரெட்டி தெரிவித்தார்.
உடனே வங்கிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த கோபி உள்ளிட்ட 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ6 கோடி கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் போலீசார் காரை வழிமறித்து கார் கதவின் கண்ணாடியை உடைத்து பணத்தை கைப்பற்றியுள்ளனர். இது சட்ட விதிமீறல் ஆகும். வங்கியில் பணம் எடுத்ததற்கான ஆதாரம் உள்ளது. அதை காட்டியும் பறிமுதல் செய்துள்ளனர்” என்றார். #BJP #ParliamentaryElections

இதுகுறித்து தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா சாகர்ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பா.ஜனதா கட்சிக்கு சொந்தமானது. எங்களது கணக்காளர் கோபி கட்சி அலுவலகத்துக்கு அந்த பணத்தை எடுத்து வரச் சென்றார்.
ஆனால் போலீசார் காரை வழிமறித்து கார் கதவின் கண்ணாடியை உடைத்து பணத்தை கைப்பற்றியுள்ளனர். இது சட்ட விதிமீறல் ஆகும். வங்கியில் பணம் எடுத்ததற்கான ஆதாரம் உள்ளது. அதை காட்டியும் பறிமுதல் செய்துள்ளனர்” என்றார். #BJP #ParliamentaryElections
பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.6.5 லட்சம் கொள்ளையடித்து சென்ற 8 பேரை கைது செய்ய கோவை வந்த தெலுங்கானா போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவை:
கோவை பீளமேட்டில் கடந்த டிசம்பர் மாதம் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.31 லட்சம் கொள்ளையடித்த வட மாநிலங்களை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த மோசம் கான்(34), முபாரக் (30), சுபைர்(19), அரியானாவை சேர்ந்த சுபைர்(33), அமின்(34), அமித்குமார்(30), உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஸ்தாக்(32), பீகாரை சேர்ந்த ஜூல்பிகர்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டியதை ஒப்புக் கொண்டனர். இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த அஸ்லாமுதீனை ஜெய்ப்பூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்தகும்பல் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.6.5 லட்சத்தை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர். இது குறித்து கோவை மாநகர போலீசார் தெலுங்கானா போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் அவர்கள் 8 பேரையும் கைது செய்வதற்காக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் நேற்று கோவை வந்தனர். ஜெயிலுக்கு சென்ற அவர்கள் ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேரையும் கைது செய்து தெலுங்கானா கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்வதற்கான ஆவணங்களை காட்டினர்.
இதைப்பார்த்த ஜெயில் அதிகாரிகள், உங்களது அடையாள அட்டை மற்றும் ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது குறித்த ஆவணங்களை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்டி சரி பார்த்து வருமாறு கூறி அனுப்பினர். அதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் தெலுங்கானா போலீஸ் அதிகாரிகளை கோவை மாநகர போலீசார் தொடர்பு கொண்டு பேசியதில் வந்தது தெலுங்கானா போலீசார் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தெலுங்கானா போலீசார் மீண்டும் ஜெயிலுக்கு சென்று ஆவணங்களை காட்டினர்.
ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மீதான வழக்கு நாளை மறுநாள்(17-ந் தேதி) கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் 8 பேரையும் தெலுங்கானா கோர்ட்டுக்கு அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
எனவே ஏ.டி.எம். கொள்ளையர்களை அனுப்புவதற்கு மேலும் சில ஆவணங்கள் தேவை என ஜெயில் அதிகாரிகள் கூறினர். இதனால் தெலுங்கானா போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.#tamilnews

×

X