search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple campus"

    தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் இருக்கும் கடைகளை அகற்ற அரசு உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கடைகளை அகற்ற கால அவகாசத்தை நீட்டித்து ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. #MeenakshiAmmanTemple
    சென்னை:

    பிப்ரவரி 2-ம் தேதி உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    கோவில் தீ விபத்துக்கு அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம் என பல்வேறு இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தினர். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களையும் அதன் சொத்துக்களையும் இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இதற்கு பலகட்ட போராட்டங்களும் அரங்கேறின. இதையடுத்து, தீப்பிடித்த சில தினங்களிலேயே மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் வளாகங்களில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதற்கு வணிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மேலும், வணிகர்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கால அவகாசம் வேண்டி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவதற்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #Madurai #MeenakshiAmmanTemple
    ×