search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple money"

    • கோவிலின் உண்டியலை வேல் கம்பியால் உடைத்துக் கொண்டிருந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் பகுதியில் பாலமரத்து முனியப்பன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் ஏதும் கிடையாது. திறந்தவெளியில் உள்ள இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் கோவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் போட்டு கொண்டே கோவிலை நோக்கிச் சென்றனர்.

    அப்போது கோவிலின் உண்டியலை வேல் கம்பியால் உடைத்துக் கொண்டிருந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான். இதுகுறித்து கோவில் பூசாரி அம்மாசைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இதுகுறித்து அம்மாசை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய திருடனை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் பயிற்சி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது ஊமாரெட்டியூரை அடுத்த கோலக்காரனூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியான நின்ற ஒரு வாலிபரை போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    மேலும் விசாரணையில் இந்திரா நகரை சேர்ந்த மாதையன் (36) என்பதும், பாலமரத்து முனியப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றதும் தெரிய வந்தது.

    இவர் தற்காலிகமாக சேலம் இரும்பாலை பகுதியில் தங்கி கட்டிடப்பணிக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். தனது தாய், தந்தையை பார்க்க ஊருக்கு வந்தவர் திருட்டு செயலில் ஈடுபட்டு ள்ளது என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    • ரிஷிவந்தியம் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (வயது 19), ரிஷிவந்தியத்தை சேர்ந்த சாமுண்டி மகன் விஜயகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் கா.பாளையம் கிராமத்தில் உள்ள அமைச்சரம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,122 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    ×