search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary mark certificate"

    • கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் மாணவர்கள் 7801 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.34 சதவீதம் ஆகும். தேர்வு எழுதிய மாணவிகளில் 9,538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 18,874 மாணவ, மாணவிகளில் 17,339 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 91.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 2.87 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

    இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறுமதிப்பீடு, மறு கூட்டல் நாளை முதல் தொடங்குவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    உடனடி தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் பயின்ற பள்ளிகளில் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு தலைமை ஆசிரியர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அவ்வாறு பெறப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் பள்ளி மாற்றுச்சான்றிதழும் வழங்கப்பட இருந்ததால் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோருடன் நேற்று வந்திருந்தனர்.

    பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்றிதழ்களை அங்கு பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ வழங்கினார்.

    இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
    ×