search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temporary work"

    • நிலச்சரிவு ஏற்பட்ட மலைகிராமங்களில் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது
    • செல்போன்கள் மற்றும் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணை க்காடு, தடியன்குடிசை, மங்கள ம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கடந்த 29-ம் தேதி அதிகாலை பெய்த கன மழையால் மலைப்பாதையில் உள்ள தாண்டிக்குடி- பட்டலங்காடு பிரிவு இடையே தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.

    இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதற்கி டையே மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜா, கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் ஆகியோர் இந்த இடத்தை ஆய்வு மேற்கொண்ட னர்.

    மேலும் சாலைகளில் சேதமடைந்த இடங்களை சீரமைக்கப்படும் இந்த பணி இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெறும் மீண்டும் போக்குவரத்து தொடங்கும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கீழ்மலை கிராமங்களில் தொடர் மழை காரணமாக பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. தாண்டிக்குடி பகுதிக்கு செம்பட்டி, வத்தலக்குண்டு பகுதியில் மாற்று மின் வினியோகம் உள்ள போதும், தாண்டிக்குடி, குப்பம்மா ள்பட்டி, கானல் காடு இடையே மின் பாதையில் பாதிப்பு உள்ளதால் சீரான மின் வினியோகம் அளிக்க முடியவில்லை.

    இதனால் செல்போன்கள் மற்றும் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மழை கிராமங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து மின் தடை இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்திருப்பதாக அதிகாரி தெரிவித்தார். #JactoGeo
    தர்மபுரி:

    புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்தால், நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. முழு ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு அறிவித்து உள்ளது.

    முதலில் அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இன்று மாலை வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு மனு கொடுக்கலாம் என்று அரசு அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக டி.டி.எட். மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    நேற்று மாலை வரை 1480 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இன்றும் ஏராளமானோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து வேலைகேட்டு மனுக்களை எழுதி கொடுத்தனர். இதேபோல பாலக்கோடு மற்றும் அரூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் ஏராளமானோர் மனு கொடுத்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருப்பவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் வேலை கேட்டு விண்ணப்பம் கொடுத்தனர்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) முதல் அவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

    ×