என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Teppather festival"
- அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது.
- 41 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப தேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.
கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப தேர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
வருகிற 12-ந் தேதி கம்பம் எடுக்கப்பட்டு தெப்பக்குளத்தில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதற்கு முந்தைய நாளான 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தெப்பத்தேர் திருவிழாவை நடத்த நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகத்தினரும் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்திலும் நடத்த முடிவு செய்தனர்.
நீண்ட நாட்களாக திருவிழா நடத்தப்படாமல் இருந்ததால் இது குறித்து முறையான அனுமதி பெற்று நடத்த வேண்டும் என விரும்பி திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யாவிடம் மாவட்ட தி.மு.க. செயலாளர் மதரா செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, நகர் மன்ற துணைத் தலைவர் நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன் எழுச்சி பாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஊர் கவுண்டர் ராஜா, நகர் மன்ற உறுப்பினர்கள் அண்ணாமலை, ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ராஜவேல் ஆகியோர் மனு கொடுத்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் திருவிழாவின் பாரம்பரியம் எப்படி நடத்தப்படும்? தெப்ப தேருக்கான ஏற்பாடுகள் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்படும் என்பது குறித்து கேட்டார். மேலும் இதுகுறித்து விரிவாக பேச அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்தா லோசனை கூட்டம் நடத்திவிட்டு முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்