search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terthiru Festival"

    • அந்தியூர் அடுத்த புதுபாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த பண்டிகையின் போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தும் பண்டிகையின் போது நடைபெறும் மாட்டுச் சந்தை குதிரைச் சந்தையை பார்த்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்த சூழ்நிலையில் புதுப்பாளையம் பகுதியில் கடை நடத்துவதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ராட்டினம் உள்ளிட்டவை அமைப்பதற்கு தேவையான இடங்களை தேர்வு செய்து இடத்தின் உரிமையாளர் இடத்தில் பேசுவதா? வேண்டாமா? என்ற குழப்ப நிலையில் வியாபாரிகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துபவர்களும் உள்ளனர்.

    இருப்பினும் இந்த ஆண்டு குருநாதசாமி கோயில் பண்டிகை நடைபெறும் என்ற ஆவலோடு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

    ×