search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "textile shops"

    மதுரையில் ஜவுளி கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியில் பிரபல ஜவுளிக்கடை முதல் மாடியில் இயங்கி வருகிறது. அந்த கடையில் இருந்து இன்று அதிகாலை 6 மணி அளவில் கரும்புகை வெளிவரத் தொடங்கியது.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே விளக்குத்தூண் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதன்பேரில் பெரியார் பஸ் நிலைய தீயணைப்பு அதிகாரி வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் கடையில் தீ வேகமாக பரவி இருந்தது. அங்கிருந்த ரெடிமேட் ஆடைகள் மற்றும் பொருட்கள் மீதும் தீ பரவியது.

    தீயணைப்பு படை வீரர்கள் ‌ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ½ மணி நேரத்திற்கு பிறகே தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வந்தது.

    இருப்பினும் கடையில் இருந்த பெருமளவு பொருட்கள், ஆடைகள் எரிந்து சாம்பலாகி இருந்தன.

    கடையில் இருந்த இன்வெர்ட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் வெடித்திருந்தன.

    இதுதொடர்பாக ஜவுளிக்கடை உரிமையாளர் குமான் சிங் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    மதுரை கீழமாசி வீதியில் தீ விபத்து நடந்த கடைக்கு அருகில் எண்ணற்ற ஜவுளி கடைகள் உள்ளன. தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரிய அளவிலான தீ விபத்து முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.


    சென்னை சவுகார்பேட்டையில் 6 ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளில் இன்று காலையில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்து வியாபாரம் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் அங்குள்ள கடைக்காரர்கள் தாக்கல் செய்துள்ள வருமானவரி விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மின்ட் தெருவில் உள்ள 6 ஜவுளிக்கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்தது.

    இதையொட்டி வருமானவரி அதிகாரிகள் இன்று காலையில் மின்ட் தெருவில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மொத்தம் 6 ஜவுளிக்கடைகளில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. கடைகளில் விற்பனையான தொகைக்கும் பில்லுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதேபோல் லீலா கோல்டு-டைமண்ட் நகைக் கடையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த கடையிலும் கணக்கில் வராத பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    ஜவுளிக்கடை அதிபரின் வீடு-அலுவலங்களிலும் வருமான வரி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி வருமானவரி அதிகாரிகள் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கடைகளில் சோதனை நடத்தி வருகிறோம். சோதனை முடிந்த பிறகு தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதை தெரிவிக்க இயலும் என்று தெரிவித்தனர்.

    வருமான வரித்துறையினரின் சோதனை சவுகார்பேட்டை வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் அடுத்தடுத்த 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு போனது.
    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் பெருந்துறை ரோட்டில் அடுத்தடுத்து 2 ஜவுளிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் அவர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடைகளை திறந்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது கடைகளின் மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பணம் வைத்த மேஜையை திறந்து பார்த்தனர். அப்போது 2 கடைகளிலும் ரூ.3 ஆயிரமும், ஒரு கணினியும் திருட்டு போனது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜவுளிக்கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணத்தையும், கணினியையும் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழையபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுத்தடுத்த 3 கடைகளில் பணம், கணினி திருட்டு போனது. அங்கும் மேற்கூரையை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தார்கள். எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், நேற்று நடந்த திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சென்னையில் தனியாருக்கு சொந்தமான 23 ஜவுளி கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #IncomeTax #ITRaid

    சென்னை:

    சென்னையில் தனியாருக்கு சொந்தமான 23 ஜவுளி கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின் பேரில் தி. நகர், சவுகார் பேட்டை உள்பட 23 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என்றும், ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வந்த புகாரில் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது. #IncomeTax #ITRaid
    ×