search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipusa Therota"

    • தேர் முகூர்த்த விழா சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலசாநாதர் கோவிலில் நடந்தது.
    • சென்னிமலை 4 ராஜா வீதிகளில் முருகப்பெருமான் வேல் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா அடுத்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    இதையொட்டி தேர் முகூர்த்த விழா சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலசாநாதர் கோவிலில் நடந்தது.

    முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீ ல ஸ்ரீ ராமநாத சிவா ச்சாரியார் தலைமையில் ஸ்தானீகம் ராஜசேகர் குரு க்கள், சின்னசாமி குருக்கள், ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்க தலைவர் மதி குருக்கள் தலைமையில் கோபூஜை, விநாயகர் வழிபாடு, புண்யாக வாசகம், பஞ்ச கவ்ய பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவையொட்டி முருகப்பெருமானின் வேலு க்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ கைலாசநாதர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தைப்பூச திருத்தேரு க்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதை தொடர்ந்து திருவிழா குறித்த தகவல் பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக சென்னிமலை 4 ராஜா வீதிகளில் முருகப்பெருமான் வேல் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    அதன் பின்பு தைப்பூச திருத் தேரோட்டத்தில் ஈடுபட கூடிய தேர் வேலை செய்யும் பணியாளர்கள், வாத்திய குழுவினர், அர்ச்ச கர்கள், ஒதுவார் மூர்த்தி, மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தலைமை குருக்கள் தேங்காய், பழம், அச்சு வெல்லம், விரளி மஞ்சள் ஆகிய பொருட்களை பிரசாத மாக வழங்கினார்.

    இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×