என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thandu Maari Amman"
- அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார்.
- அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இதில் சிதலமடைந்து இருந்த சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு 72 லட்சம் ரூபாய் மற்றும் விநாயகர் கோவிலுக்கு 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார். அவரை தி.மு.க தொண்டர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக வழங்கினார். பின்னர் சுப்பிரமணியர் சுவாமி கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடப்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கோவிலில் உள்ள திருமண மண்டபத்தை ஆய்வு செய்த அவர், மண்டபத்தை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்குவதாகவும், மேல் தலத்தில் அன்னதானத்திற்கான இடம் அமைத்தல் மற்றும் பார்க்கிங் வசதி செய்வதற்கான சிறப்பு நிதியை ஒதுக்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்