search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "that their crops are withering without water"

    • குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • கால்வாயின் கடைமடையில் பாசன பகுதிக்குட்பட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து 200 கிமீ செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாயின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே கடந்த அக்ேடாபர் மாதம் 30-ந் தேதி உடைப்பு ஏற்ப ட்டதால் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையால் தாமதமாக கடைமடை பகுதியில் நெல்சாகுபடி செய்ததாக தெரிவித்த விவசாயிகள், கால்வாய் உடைப்பால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் முற்றிலும் கிடை க்காத நிலை ஏற்பட்டதாக கூறினர்.

    மேலும் குறைவான அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராது என்றும் தெரிவித்தனர். கால்வாயின் கடைமடையில் பாசன பகுதி க்குட்பட்ட பாண்டி பாளையம், குட்டக்கா ட்டுவலசு, கணக்க ம்பாளையம், குலவிளக்கு, காகம் உள்ளி ட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் விரைந்து கிடைக்கவும், நெற்பயிர்களை பாதுகாக்கவும் கால்வாயில் முழு கொள்ளளவான 2 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தண்ணீர் முழுமையாக கிடைத்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், இல்லை யெனில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செலவு செய்து நடவு செய்த பயிர்கள் வீணாகிவிடும் என்றும் வேதனை தெரிவித்தனர்.

    ×