search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The dam is full"

    • கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
    • 2000 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்ப நாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

    ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஏறக்குறைய 2000 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகின்றன.

    சுற்றுப்புற கிராமங்க ளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழையால், அணைத்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 31 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, இன்று காலை நிலவரப்படி 51.52 அடியாக உள்ளது.

    அணையில் 175.60 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனால் அணைப் பாசனம் மற்றும் ஆறு, ஏரி பாசன விவசாயிகளும், கரையோர கிராம விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 31 கன அடி தண்ணீரும், அணையின் பிரதான மதகு வழியாக கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த உபரிநீர் குமாரபா ளையம் அருகே வசிஷ்ட நதியில் கலப்பதால், கரியக்கோயில் ஆறு மற்றும் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கரையோர கிராம மக்களுக்கு, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×