search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THE FARMER WAS BEATEN TO DEATH"

    • வாலிபர் கைது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த உப்பிரபல்லி கொல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு கோவிந்தசாமி, ரவி (வயது 60), பாபு என்ற 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் கோவிந்தசாமியும், பாபுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. நிலம் சம்பந்தமாக கோவிந்தசாமி குடும்பத்தினருக்கும், பாபு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரவி கடந்த 14-ந் தேதி தனது அக்கா லைலா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோவிந்த சாமியின் மகன் ராஜேந்திரன் ( 28) என்பவர் தனது சித்தப்பா ரவியை அழைத்து நிலம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் ரவியை சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் போலீசார் ராஜேந்திரன் மீது கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • மகளை அழைத்து வருவதற்காக சென்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 47). விவசாயி. இவரது மகள் துர்கா நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் அரியலூருக்கு வந்தார். அவரை ஊருக்கு அழைத்து வருவதற்காக நேற்று மாலை மாக்காயிகுளத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அரியலூர் ெரயில் நிலையம் நோக்கி ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தார்.

    ராமலிங்கபுரம் காட்டுப்பகுதியில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் மறைந்திருந்தவர்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் திடீெரன வந்து, மோட்டார் சைக்கிள் மூலம் ராமச்சந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, சாலையோர பள்ளத்தில் தள்ளி இரும்பு ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ராமச்சந்திரனின் மனைவி லலிதா கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், மதியழகன், மங்களமேடு துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, ராமச்சந்திரனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ராமச்சந்திரனின் உடலை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×