என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The public gathered"
- பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரை நேரில் மனு அளித்தனர்.
- ஒரு சிலர் இந்த மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று நடந்தது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து கலெக்டரை நேரில் மனு அளித்தனர்.
ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதிக்கு மின் மயானம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை அளித்து வந்தோம். இதன் பலனாக தமிழக முதல்-அமைச்சர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈச்சனாரி அருகில் நடைபெற்ற அரசு விழாவில் ஒத்தக்கால் மண்டபத்திற்கு மின் மயானம் அமைக்க அடிக்கல் நாட்டினார். மற்றும் பேரூராட்சி மன்றத்திலும் அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.
கட்டும் பணி தொடங்கும் என்று நினைத்திருந்த போது ஒரு சிலர் இந்த மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் அருகே வீட்டு மனை பிரிவுக்காக வேண்டுமென்றே சிலர் பேரூராட்சிக்கும், அரசுக்கும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் பணி செய்ய வரும் அரசு அதிகாரிகளை தடுத்து வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி எங்களது பகுதிக்கு மின் மயானம் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
கோவை சுண்டக்காமுத்தூர் எம்ஜிஆர் தோட்டத்தை சேர்ந்த நரிக்குறவ மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கைகளில் பாசிமணி கோர்த்துக் கொண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். தோட்டத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடமானது கோவிலுக்கு சொந்தமானது. தற்போது பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி சேதம் அடைந்து வருகிறது. எனவே எங்களுக்கு வேறு பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்