search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the traditional Ganduri"

    • பாரம்பரியமிக்க கந்தூரி விழாவில் 100 கிடாய்கள் வெட்டி கறி விருந்து நடந்தது.
    • வீடுகளுக்கு எடுத்து சென்று குடும்பத் துடன் பசியாறியும் மகிழ்ந்த னர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் முகம்மது நபி யின் பிறந்த நாளான மீலாது நபி நிகழ்ச்சியின் நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி மாபெரும் பாரம் பரிய கந்தூரி விழாவான கறிவிருந்து படைக்கும் நிகழ்ச்சி வீரசோழன் பெரிய பள்ளி வாசலில் வெகு விம ரிசையாக நடைபெற்றது.

    சுமார் 100-க்கும் மேற் பட்ட கிடாய்கள் வெட்டி படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 100 சிப்பம் அரிசி மூட்டை களை சாதமாக தயாரித்து நடைபெற்ற இந்த மாபெரும் கந்தூரி விழா கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் ஆர்வமுடன் திரளாக கலந்து கொண்டு பசியாறி மகிழ்ந்தனர்.

    மேலும் இந்த கறி விருந் திற்காக படைக்கப்பட்ட கிடாய்களின் தலைகள், குடல்கள், ஈரல்கள், தோல் கள் மற்றும் கால்கள் ஆகி யவை பாரம்பரிய கந்தூரி விழா நிகழ்ச்சி முறைப்படி ஏலம் விடப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சிக் காக அனைத்து சமுதாயத்தி னருக்கும் முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் மீலாது நபி நிறைவு நாளை முன்னிட்டு சுமார் 200 ஆண்டு கால பாரம்பரியமாக சிறந்து விளங்கி வரும் இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சி யானது முஸ்லீம் பெருமக்க ளின் பள்ளிவாசல் சிறப்பு தொழுகைக்கு பின்னர் அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கியது.

    இந்த கந்தூரி விழா கறிவிருந்து நிகழ்ச்சியில் ஜாதி, மத, பேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிடாய் கறிவிருந்தில் கலந்து கொண்டு உணவை உண்டு பசியாறினர். மேலும் டோக் கன் முறையில் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப் பட்ட இந்த உணவை பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று குடும்பத் துடன் பசியாறியும் மகிழ்ந்தனர்.

    ×