search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The truck that came to"

    • கழிவுகளை கொட்ட கூடாது என்று பேரூராட்சி நிர்வாகத்தால் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.
    • அதனையும் மீறி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச் சாம்பாளையம் பகுதியில் கழிவுகளை கொ ட்ட கூடாது என்று பேரூரா ட்சி நிர்வாகத்தால் கடந்த மாதம் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.

    அவ்வாறு கொட்ட வரும் வாகனத்தின் மீதும், வாகனத்தின் உரிமை யாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என்று பேரூரா ட்சி நிர்வா கத்தின் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்ப ட்டிருந்தது.

    அதனையும் மீறி அந்தபகு திக்கு வந்த கழிவுக ளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கவிதா, நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் சம்பந்தப்பட்ட நார் தொழிற்சாலை நடத்து வரிடத்தில் பேச்சுவார்த்தை செய்து இனி இதுபோல் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததை அடு த்து அங்கிருந்து பொதும க்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் செம்புளி ச்சாம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ×