search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the wild elephant that"

    • யானை தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
    • 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்துக்குள் ஒற்றை காட்டுயானை இன்று புகுந்தது.

    குடியிருப்பு பகுதியில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்த யானை சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்தது விளைப் பொருட்களை சேதப்படுத்தியது.

    இதை பார்த்து அதிர்ச்ச டைந்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் யானையை விரட்ட முயன்றனர். ஆங்காங்கே தீ மூட்டியத்துடன், டார்ச் லைட் அடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

    இதனையடுத்து டிராக்டர் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகு திக்குள் சென்றது.

    இதனையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட னர். எனினும் வன பகுதி யில் இருந்து எந்த நேரமும் மீண்டும் ஊருக்குள் யானை வரலாம் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் உள்ளனர்.

    வனத்துறையினர் யானையின் நடவடிக்கையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×