என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "therapy"
- மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது.
- கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் உழைப்பு மற்றும் உடற்பயிர்சி இல்லா வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுவது போன்றவர்களுக்கு மூட்டுத்தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். நடக்க, அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம், கால் வலி, மூட்டு இறுக்கமாகுதல், காலை இயல்பாக நீட்டி மடக்க முடியாதது, கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் பருமனாக இருப்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே இருப்பவர்கள், அதிகமான உடலுழைப்பை செலுத்தி வேலைகள் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், தேய்மானத்தின் பாதிப்புக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிசியோதெரபி பயிற்சி, பணிகளை மாற்றி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் வாயிலாக பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கலாம்.
உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஏனென்றால் துரித உணவுகளை சாப்பிடும் போது உடல் பருமன் ஏற்பட்டு மூட்டுவலி ஏற்படும். இதனால் டயட் ஃபாளோ செய்ய வேண்டும்.
மேலும் மூட்டு தேய்மானத்திற்கான ப்ரப் சிகிச்சை பற்றி விரிவான விளக்கம் அளிக்கிறார் டாக்டர் லட்சுமிநாதன்.
- மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால்.
- மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்பொழுது பிரித்விராஜ் இயக்கும் எம்புரான் திரைப்படத்திலும், பாரோஸ் மற்றும் எல்360 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மோகன் லால் மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகளவு காய்ச்சல் மற்றும் தசை வலி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோகன்லாலுக்கு வைரல் தொற்றும் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 5 நாட்களுக்கு பொது இடங்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம் எனவும் நன்றாக ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
விரைவில் மோகன்லால் குணமாக ரசிகர்கள் மற்றும் மக்கள் பிராத்தித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறா
- தனது பூனையுடன் சமந்தா ரெட் லைட் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்து வரும் சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட்காஷ்டில் சொல்லப்படும் மருத்துவ குறிப்புக்கள் தவறானவை என்று சமீபத்தில் சர்ச்சையும் எழுந்து அடங்கியது.
இந்நிலையில் சருமத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தனது மயோசிடிஸ் நோயை குணப்படுத்த வெளிநாடுகளில் பல்வேறு தெரபிகளை எடுத்து வரும் சமந்தா, தற்போது ரெட் லைட் தெரபி சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த தெரபியை தனது பூனையுடன் சேர்ந்து சமந்தா எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'ரெட் லைட் தெரபி டேட் ' என தனது பூனையுடன் சென்ற டேட்டிங் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார்.
- ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
- பெங்களூரு அணி டோனிக்கு கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.
பெங்களூரு அணி டோனிக்கு கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.
இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார். அவர் முடிவு எடுக்க நாங்கள் நேரம் கொடுப்போம் என்று கூறிய நிலையில்
டோனி கால் தசை நார் வலிக்கு அறுவை சிகிச்சை லண்டனில் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிகிச்சையை முடித்துவிட்டு அவரது எதிர்கால திட்டங்களை குறித்து யோசிக்க போகிறார். இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
- வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.
- பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞர் மற்றும் பெண் தோழி இருவரும் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர் அந்த பெண் தோழியை சரமாரியாக தாக்கினார். வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். நிலை தடுமாறிய அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதை அந்த வழியாக வந்த வக்கீல் ஒரு தனது செல்போனில் வீடியோவாக பதிவேற்றினார். இதை கண்ட அந்த வாலிபர் சற்று சுதாரித்து கொண்டு எதுவும் நடைபெறாததது போல், மயங்கிய அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் நடகமாடினார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், வழக்கறிஞரையும் உதவிக்கு அழைப்பது போலும் நாடகமாடினார்.
இதை செல்போனில் வீடியோ எடுத்த வழக்கறிஞர் மற்றும் அந்த வாலிபர் இருவரும் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து சென்றனர். அந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த வாலிபரின் வண்டி எண்ணை வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து அந்த வாலிபருக்கும், பெண்ணும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், வாலிபர் ஏன் அந்த பெண்ணை தாக்கினார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மீது ஏதேனும் தவறு இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.
- தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள் முயல், நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரமாக கால்முறிந்த நிலையில் ஒரு ஆண் மட்ட குதிரை ஒன்று கிடந்தது. இதுகுறித்து வனச்சரகர் அலுவலக அயூப்கானுக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து, அந்த குதிரை பிடிக்கப்பட்டு வனத்துறையினர், கால்நடை மருத்துவர் சிவசூரியன் மற்றும் மருத்துவ குழுவினர் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த குதிரைக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து மட்ட குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குதிரை நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.
தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- மேல் சிகிச்சைக்கு 10 நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
- முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலசங்கம் கூட்டமைப்பு , பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை, ஐ கேர் ஆப்டிகல்ஸ் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
. இந்த முகாமிற்கு கூட்டமைப்பு தலைவர் சாமி செல்வம், ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், பொருளாளர் உதயகுமார், கவுரவத் தலைவர் இளமுருகசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்புச் செயலாளர் பாபு வரவேற்றார்.
இந்த முகாமில் ஆண் பெண் என 150 க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு கண்களுக்கு விழி ஒளி பரிசோதனை, சர்க்கரை நோயினால் வரும் விழித்திரை பாதிப்பு, தலைவலி, கண் புரை, கண் உறுத்தல், வீக்கம், கண் எரிச்சல், நீர் வடிதல், வழி திரை பாதிப்பு, உள்ளிட்ட நோய்களுக்கு அட்வான்ஸ் ஆட்டோ ரிப்ரஷன் இயந்திரம் மூலம் கண்ணை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர். மேல் அறுவை சிகிச்சைக்கு 10 நபர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து முகாமில் பாதி விலையில் கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன், சமூக சேவைகி பத்மா, மேலாண்மை குழு உறுப்பினர் அப்பர் சுந்தரம், உள்ளிட்ட ஏராளமான குடியிருப்பு நல சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் நெறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்
- வினித்குமார் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் வினித்குமார் (வயது19). இவர் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றார். அப்போது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். உடன் அவரை, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனசேகரன் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மதுரை தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.
வீ.கே.குருசாமி-ராஜபாண்டி
மதுரை
பெங்களூருவில் கொலைவெறி தாக்குத–லுக்குள்ளான திமுக பிரமுகர் வி.கே.குரு சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி. இவருக் கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே கடந்த 23 ஆண்டுக ளாக தொடர்ந்து முன் விரோதம் இருந்து வருகிறது. இருதரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட நிலையில் வி.கே.குருசாமியும் அவரது மகன் மணியும் தலைமுறைவாக இருந்து வருகிறார்கள். வி.கே.குருசாமி மீது கொலை மற்றும் கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கு விசாரணைக்காக அவ்வப் போது மதுரைக்கு வந்து கோர்ட்டில் ஆஜ ராகி விட்டு வெளியூர் செல்வதை வி.கே.குருசாமி வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு பெங்க ளூருவுக்கு சென்ற வி.கே.குருசாமி அங் குள்ள சுக்சாகர் பகுதியில் உள்ள ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த போது தமிழக பதிவு எண் கொண்ட காரில் வந்து இறங் கிய 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயு தங்க ளுடன் வி.கே.குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது.
இதில் கழுத்து, தலை, மார்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் வி.கே.குருசாமி கீழே சாய்ந்தார். உடனடி யாக அவரை அங்குள்ளவர்கள் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வி.கே.குருசாமி அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பானசவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் மதுரை வந்துள்ள னர். மதுரை காமராஜர் புரம், வாழை தோப்பு, கீரை துறை ,கீழ் மதுரை ரயில் நிலைய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வி கே குருசாமியின் மீதான கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ராஜபாண்டியின் உறவினர்கள் குறித்தும், கமுதி பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை, ராம நாதபுரம் மாவட்டங்களில் பெரும் பரபரப் பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
வி.கே.குருசாமி வெட்டப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதியில் பரவி வருவதால் பதட்டத்தை தணிக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.
- பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது.
- கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித்திரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, விலங்குகள் நல தொண்டு நிறுவன செயலாளர் அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பணியாளர்கள் உதவியுடன் தெருக்களில் சுற்றித்திரிந்த 37 நாய்கள் பிடிக்கப்பட்டது. பின், அவற்றை கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் செய்திருந்தார்.
- பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.
- ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மற்று அதன் சுற்று வட்டார கிராமத்தில் இருந்து, தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர், மங்கலம்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள், வயதான முதியோர், அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.
இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள், ஒரு சித்த மருத்துவர், ஒரு பல்நோக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணி புரிகின்றனர். காலை 7.30 மணிக்கு வரவேண்டிய மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. இதனால், தினந்தோறும் இங்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மருத்துவ சீட்டு வாங்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. இதனால், இன்று காலை சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் திடீரென மருத்துவமனை முன்பு, கையில் மருத்துவ சீட்டுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்ளி ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ராம்குமார், இந்திய குடியரசு கட்சி மாவட்ட பொருளாளர் கணேசன், நகர தலைவர் கதிர்காமன், அலிபாபு உட்பட சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.
- சிகிச்சைக்காக 2 பேரும் தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 67).
அதே பகுதியை சேர்ந்தவர் விவேக் (36).
இவர்கள் 2 பேரும் இன்று கீழவாசலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவர்கள் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதை பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.
உடனடியாக இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது,
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து விவேக்கிற்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் கள்ளசாராயத்தில் பலர் இறந்த நிலையில் தஞ்சையில் இன்று மது குடித்து முதியவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்