search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They burst crackers and chased it into the forest"

    • ஆந்திரா -தமிழக எல்லையில் அட்டகாசம்
    • அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    ஆந்திரா மாநிலம் ராமாகுப்பம் மண்டலம் கொல்லப்பள்ளி பகுதி உள்ளது. இதன் அருகே வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விவசாய நிலத்தில் காட்டு யானைகள் புகுந்துள்ளது.

    மேலும் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை காட்டு யானைகள் மிதித்து நாசம் செய்தன.

    கிணற்றின் அருகே இருந்த குழாய்களை உடைத்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.

    அப்போது அந்த யானைகள் அப்பகுதி மக்களை துரத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பட்டாசுகளை வெடித்து சத்தம் எழுப்பி அதனை வனப் பகுதிக்குள் துரத்தினர்.

    பின்னர் இது குறித்து ராமா குப்பம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி சென்றதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ×