search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They chanted emphasizing various demands."

    • 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் மாணவிகள் தவறி விழுந்து இறந்தனர்
    • குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குகோரி நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். வாணி யம்பாடி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல். ஏ.க்கள் கோவி. சம்பத்குமார்,கே.ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயலாளர் சிவகுமார் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியிருந்த 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் மோனிகா, ராஜலட்சுமி ஆகிய பள்ளி மாணவிகள் தவறி விழுந்து இறந்தனர்.

    இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதோடு, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல், ஆலங்காயம் பேரூராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான தேக்கு மரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளாகந்தன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், பேரூராட்சி துணை செயலாளர் சந்தோஷ், முன்னாள் பேரூராட்சி செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×