search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiravupathi amman"

    • சிவகிரியில் 100 ஆண்டு கால பழமையான திரவுபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடப்பது வழக்கம்.
    • இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிவகிரி:

    சிவகிரியில் 100 ஆண்டு கால பழமையான திரவுபதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த வருடம் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவிலில் உள்ள மூலவர் உட்பட அனைத்து சாமிகளுக்கும் சந்தனம், பன்னீர், பால், தயிர், இளநீர் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவிலிலிருந்து கொடி பட்டத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.

    பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் பூசாரி மாரிமுத்து தலைமையில் இலஞ்சி குமாரர் கோவில் அர்ச்சகர் கணேச கனவாடிகன் மற்றும் சுந்தர் பட்டர் என்ற ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து திரவுபதி, கிருஷ்ணர், அர்ச்சுனன்உள்பட அனைத்து சாமி சிலைகளுக்கும் காப்புகள் கட்டப்பட்டன. கோவில் பூசாரி மாரிமுத்துவுக்கு இலஞ்சி குமாரர் கோவில் அர்ச்சகர் கணேச கனபாடிகன் காப்பு கட்டியவுடன் பூக்குழி இறங்குவதற்காக 41நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு பூசாரி காப்பு கட்டினார்.

    1-ம் திருநாளான நேற்று கீழத்தெரு தேவர் சமூகத்தினரால் நடத்தப்பட்டது. அம்மன், கிருஷ்ணன் அர்ச்சுனன் ஆகிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி ஒவ்வொரு நாள் இரவும் வீதியுலா காட்சியின் போது பக்தர்களுக்கு காட்சியளிப்பர். ஒவ்வொரு நாள் திருநாளும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்படுகிறது.

    வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் திரவுபதி அம்மன் கோவில் முன்பாக உள்ள பூக்குழி திடலில் பூக்குழி நடைபெறும். அன்றைய தினம் 1000 பக்தர்கள் பூக்குழி இறங்குவர்

    விழாவிற்கான ஏற்பாடுகளை காப்பு கட்டும் பக்தர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பாண்டியராஜன், மற்றும் அனைத்து காப்பு கட்டிய பக்தர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய தலைவர்கள், தலையாரி அழகுராஜா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வருகிற 15-ந்தேதியன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    ×