என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirumal"
- மதுரகவியாழ்வார் - குமுதம்
- குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்
பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் திருமாலின் அம்சங்கள்.
திருமாலின் அம்சமாக பன்னிரண்டு ஆழ்வார்களும், ராமானுஜரும் தோன்றினார்கள்.
அதன் விபரம்:
1. பொய்கையாழ்வார்-சங்கு (பாஞ்சசன்யம்)
2. பூதத்தாழ்வார்-கதை (கவுமோதகி)
3. பேயாழ்வார்-வாள் (நந்தகம்)
4. திருமழிசையாழ்வார்- சக்கரம் (சுதர்சனம்)
5. நம்மாழ்வார்- விஷ்வக்சேனர்
6. மதுரகவியாழ்வார்- குமுதம்
7. குலசேகர ஆழ்வார்- கௌஸ்துபம்
8. பெரியாழ்வார்- கருடன்
9. ஆண்டாள்- பூமகள்
10. தொண்டரடிப் பொடியாழ்வார் - வனமாலை
11. திருப்பாணாழ்வார்- ஸ்ரீவத்ஸஜீம்
12. திருமங்கையாழ்வார்- வில் (சார்ங்கம்)
13. ராமானுஜர்- ஆதிசேஷன்
- பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
- கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாரண்யம்’ என்றும் பெயர் பெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம்.
இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது.
இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது.
அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.
இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர்.
போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள்.
அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.
அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார்.
அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார்.
அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார்.
அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார்.
இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.
வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது. இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.
பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணாரண்யம்' என்றும் பெயர் பெற்றது.
தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும்.
காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது.
பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள்.
இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.
தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக் கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சி யாய் இன்பம் அளிக்கிறது.
- ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
- ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.
1. ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.
2. ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
3. ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களிடம் இந்த ஆலயத்தின் சிறப்புகளை அர்ச்சகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பது சிறப்பாகும்.
4. ஆதிதிருவரங்கம் ஆலயம் திராவிட கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் திராவிட கலையின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
5. ஆதி திருவரங்கம் ஆலயத்தை மிகப்பெரிய ஆலயம் என்றும் சொல்ல முடியாது. மிகச்சிறிய ஆலயம் என்றும் குறித்துவிடமுடியாது.
2 பிரகாரங்களுடன் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
6. ஆதி திருவரங்கத்தின் ஆலய சுற்றுச்சுவர்கள் மிக மிக உயரமானவை. வைணவ தலங்களில் சில ஆலயங்களில் மட்டுமே இத்தகைய உயரமான சுற்றுச்சுவரை காண முடியும்.
7. இந்த ஆலயத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகிய இரண்டும் மகா மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
8. இந்த ஆலயம் முதல் யுகத்தில் திருமாலின் முதல் அவதாரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எனவேதான் இந்த ஆலயத்தை ஆதி திருவரங்கம் என்று சொல்லுகிறார்கள்.
9. சிறப்பான வைணவ தலங்கள் 108 திவ்ய தேசம் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த தலம் திவ்ய தேச பட்டியலில் இல்லாமல் தனித்துவமாக திகழ்கிறது.
10. ஆதி திருவரங்கம் ஆலயம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும்.
- பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
- இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.
ஆதி திருவரங்கம் திருத்தலத்துக்கு செல்பவர்கள் திட்டமிட்டு யாத்திரை பயணத்தை அமைத்துக் கொண்டால் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள பல ஆலயங்களை பார்த்துவிட்டு வர முடியும்.
ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் இருந்து 10 கி.மீட்டர் சுற்றளவில் மிகப்பழமையான சைவ, வைணவ தலங்கள் உள்ளன.
இந்த தலங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பு கொண்டவை.
பல ஆலயங்கள் பாடல் பெற்றவை. குறிப்பாக திருக்கோவிலூர் ஆலயம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு செல்பவர்கள் அவசியம் திருக்கோவிலூர் ஆலயத்துக்கும் சென்று வாருங்கள்.
இதில் திட்டமிடல்தான் முக்கியமானது.
ஏனெனில் பெரும்பாலான ஆலயங்கள் மதியம் நடை மூடப்பட்டுவிடும்.
ஆனால் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் பகல் நேரத்தில் நடை மூடப்படுவதே கிடையாது.
அதிகாலை 6 மணிக்கு திறந்தால் இரவு 8 மணிவரை அந்த ஆலயம் திறந்தே இருக்கும்.
எனவே ஆதிதிருவரங்கம் ஆலயத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்.
மற்ற ஆலயங்களுக்கு முன்னதாக சென்றுவிட்டு மதியம் நேரத்தில் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் தரிசனம் செய்யும் வகையில் உங்கள் ஆன்மிக பயணத்தை வைத்துக்கொண்டால் கூடுதலாக சில ஆலயங்களை தரிசனம் செய்யமுடியும்.
சென்னையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள பழமையான ஆலயங்களை தரிசிக்க செல்பவர்களுக்கு ஆலயம் நடை மூடப்படும் நேரம் மற்றும் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் முக்கியமானதாகும்.
ஆதிதிருவரங்கத்துக்கு செல்பவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. எப்போதும் வழிபட முடியும்.
- ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
- இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆதி திருவரங்கம் ஆலயத் தில் தினமும் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.
காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் முதல் பூஜை நடத்தப்படும்.
பிறகு மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் 2&வது பூஜை நடைபெறும்.
மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட மாட்டாது.
மூலவர் சிலை மூலிகை மற்றும் சுதையால் செய்யப்பட்டு இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
அதற்கு பதில் சந்தனகாப்பு செய்யப்படுகிறது.
உற்சவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும்.
சனிக்கிழமை தோறும் சிறப்பாக அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.
அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.
பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.
ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.
இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.
- இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.
பொதுவாக பெருமாள் 8 விதமான சயன கோலத்தில் காட்சி அளிப்பார்.
உத்தான சயனம், தர்ப்ப சயனம், தல சயனம், புஜங்க சயனம், யோக சயனம், மாணிக்க சயனம், வடபத்ர சயனம், வீர சயனம் என்று 8 விதமான கோலத்தில் ரங்கநாதரின் சயன கோலங்களை பல்வேறு ஆலயங்களில் காணலாம்.
திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.
இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.முதல் யுகம் பாற்கடலில் பள்ளிக்கொண்டதை குறிக்கும். அதற்கு வெண்மை உகந்தது.
எனவே ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாளை வெண்மை நிற பூக்களால் வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
முதல் யுகத்தில் பெருமாளின் முதல் அவதாரமாக நடந்தது மச்ச அவதாரம் ஆகும்.
மச்ச அவதாரத்திற்கு உரிய திதியாக நவமி திதி உள்ளது.
ஆகையால் நவமி திதி நாட்களில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பு.
ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று வழிபட்டால் மேலும் பலன் கிடைக்கும்.
- ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.
- அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.
நாம் மேலே குறிப்பிட்ட ரங்கநாதர் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் பெருமாள் விதவிதமான சயன கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆலயங்களில் உள்ள பெருமாள்கள் சுமார் 15 அடி முதல் 21 அடி வரை சயன கோலத்தில் உள்ளனர்.
ஆனால் இந்த சயன கோல பெருமாள்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் திருக்கோவிலூர் அருகே
ஆதிதிருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் மிக பிரமாண்டமான சயன கோலத்தில் இருக்கிறார்.
23 அடி நீளத்தில் அங்கு ரங்கநாதர் புஜங்க சயனத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய சயன கோல பெருமாள் இவர்தான். ஸ்ரீரங்கம் பெருமாளையும் விட பெரியவர்.
ஸ்ரீரங்கம் தலம் தோன்றும் முன்பே உதித்து விட்டவர். எனவே இவரை பெரிய பெருமாள் என்று சொல்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் 7&வது அவதாரத்தில்தான் வந்தார்.
ஆனால் ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதல் அவதாரத்திலேயே வந்து விட்டவர்.
இதில் இருந்தே ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் முதன்மையானவர் என்பது புரியும்.
ஆனால் தமிழகத்தில் நிறைய பேர் இந்த உண்மையை இன்னமும் உணராமலேயே இருக்கிறார்கள்
ஆதிதிருவரங்கம் ரங்கநாதரை பார்ப்பதே மிகப்பெரிய பாக்கியம்.
அவரது ஆசி இருந்தால் மட்டுமே அவரை சென்று பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.
- சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.
- இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பஞ்சரங்கம் என்று கூட 5 தலங்களை நமது முன்னோர்கள் வரையறை செய்துள்ளனர்.
ஸ்ரீரங்க பட்டினத்தில் உள்ள ஆலயம் ஆதிரங்கம் என்றும், திருப்பேர் நகரில் உள்ள ஆலயம் அப்பால ரங்கம் என்றும்
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆலயம் மத்திய ரங்கம் என்றும், கும்பகோணத்தில் உள்ள ஆலயம் சதுர்த்த ரங்கம் என்றும்,
மயிலாடுதுறையில் உள்ள ஆலயம் பஞ்ச ரங்கம் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த பஞ்சரங்க ஆலயங்களை தவிர மேலும் சில ரங்க ஆலயங்கள் ரங்கநாதருடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றன.
சீர்காழி தாலுகாவில் மாதானைக்கு அருகே வடரங்கம் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் ஆலயம் உள்ளது.
நாகை மாவட்டம் கீழையூரில் கீழரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் ஸ்ரீரங்கத்துக்கு அபிமான தலமாக விளங்கும் தலமாகும்.
திருத்துறைப்பூண்டி அருகேயும் ஆதிரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.
சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.
இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.
- சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.
- இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.
பொதுவாக திருமால் தமிழகம் முழுவதும் மூன்று விதமான கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஒன்று நின்ற கோலம், 2வது சயன கோலம், 3வது அமர்ந்த கோலம்.
அவர் எடுத்த அவதாரங்கள் கணக்கிட இயலாதவை.
அதனால் 25வது அவதாரங்கள் முக்கியமானவை என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
அதிலும் தசாவதாரம் மட்டுமே தற்போது நடைமுறையில் பேசப்படுவதாக உள்ளது.
அதிகம் தேடிச்சென்று வழிபடக் கூடியவையாகவும் அவை இருக்கின்றன.
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்று 10 அவதாரங்களை பெருமாளின் தசாவதாரமாக சொல்கிறார்கள்.
இந்த 10 அவதாரங்களும் நிகழ்ந்த தலங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.
இந்த அவதாரங்களுடன் தொடர்புடைய தலங்களும் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றன.
இந்த தலங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் மிக சிறப்பானதாக கருத்து உண்டு.
அப்படி மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த 108 திவ்யதேசங்களில் திருமால் 67 ஆலயங்களில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
சயன கோலத்தில் 24 தலங்களிலும், அமர்ந்த கோலத்தில் 17 தலங்களிலும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
சயன கோலத்தில் காட்சி அளிக்கும் 24 தலங்களில் அவர் கிழக்கு முகமாக 18 தலங்களில் உள்ளார்.
மேற்கு முகமாக 3 தலங்களிலும், வடக்கு முகமாக 3 தலங்களிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.
இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.
இங்கு ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.
இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.
- நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.
- ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.
விஷ்ணு பிரபுவே, என் அகந்தை அழிந்து மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டுங்கள்.
என் மீது கருணை காட்டுங்கள்.
எப்போதும் உமையே சரண் அடையும் பாக்கியத்தை தாருங்கள் என்று தினந்தோறும் திருமாலை நினைத்து மனம் உருக வழிபட வேண்டும்.
இந்த புத்தாண்டு, பொங்கல் திருநாளில் மகாவிஷ்ணுவை நெருங்குவதற்கான சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
விஷ்ணு என்றால் "எங்கும் நிறைந்தவர்" என்று பொருள். எனவே விஷ்ணுவை வழிபட எல்லா இடத்திலும் வாய்ப்புகள் உண்டு.
நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.
நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.
ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.
கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, தாமோதரா என்று திருமாலின் திருநாமங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
- மச்ச புராணம் 14,000 கிரந்தப் பாடல்கள் (சுலோகம்) கொண்டது.
- கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது.
மச்ச புராணம் 14,000 கிரந்தப் பாடல்கள் (சுலோகம்) கொண்டது.
இதில், மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப்பிரளயத்திலிருந்து வைவஸ்தமனு மற்றும் சப்தரிஷிகளையும்
காத்து உலகில் மீண்டும் சீவராசிகளை வளர்ச்சியடையச் செய்ததையும்,
பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல்,
கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது.
- அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
- இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.
ராவணின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.
பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்திருளினார்.
திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.
இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.
இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும். மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.
ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.
ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனனை ரும்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.
பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டில் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.
குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்