என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thirumangalam accident"
திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் அருண் (வயது 19). இவர் திருமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு அருண், தனது நண்பர்கள் ராம் குமார் (22), காளிமுத்து (22) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் சென்றார்.
அப்போது நெடுங்குளத்தில் இருந்து உலகாணி நோக்கி மணல் லாரி வந்தது. அந்த லாரி நெடுங்குளம் விலக்கில், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் அருண் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அருண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
ராம்குமார், காளி முத்து ஆகியோர் காயத்துடன் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் கோபால் (59) விவசாயி. இவர், டி.கல்லுப்பட்டி- ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோபால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை வில்லிவாக்கம் பாபா நகரைச் சேர்ந்தவர் மனோராதேன் (வயது 38) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஜித் (வயது 9) திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 17-ந்தேதி காலை தனது தந்தை மனோராதேனுடன் பைக்கில் சிறுவன் ரஜித் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான் திருமங்கலம் 21-வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக தடையில் ஏறி இறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சிறுவன் ரஜித் கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரஜித் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். #accident
போரூர்:
சென்னை வில்லிவாக்கம் தாந்தோணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவி ராஜன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 31).
பிரித்திவிராஜன் நேற்று மாலை தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் கோயம்பேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இரவு 8 மணி அளவில் வீடு திரும்பும் வழியில் திருமங்கலம் 100 அடி சாலை 18-வது மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் இறங்கியது. இதில் நிலை தடுமாறி பிரித்திவிராஜன் மனைவி குழந்தைகளுடன் சாலையில் கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியே கியாஸ் சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி முருகேஸ்வரி இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது உடனடியாக முருகேஸ்வரியை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
திருமங்கலம் அருகே உள்ள ஓணான்டிபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (26).
நேற்று இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்திற்கு புறப்பட்டனர். சாத்தங் குடி-கண்டுகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் கணவர்-மனைவி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த கவிதா கணவர் கண் முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய கண்ணன் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவமணி (31) ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர், ஜீவா நகரைச் சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் முத்தீஸ்வரன் (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர் மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.
சில மாதங்களாக புதிய மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று முத்தீஸ்வரன் தந்தையிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த வாரம் அழகுசாமி, தனது மகனுக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். சம்பவத்தன்று புதிய மோட்டார் சைக்கிளில் முத்தீஸ்வரன் வெளியே புறப்பட்டார்.
தோப்பூர் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. அப்போது கீழே விழுந்த முத்தீஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் ரத்தம் ஏதும் வரவில்லை. இதையறியாத முத்தீஸ்வரன் பின்னர் வீட்டுக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர், முத்தீஸ்வரனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தின் போது முத்தீஸ்வரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போதே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருந்தால் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது என கூறப்படுகிறது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ராமேசுவரி (வயது 32). இவர்கள் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு காட்டு பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர்.
கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் புறப்பட்டனர். குறுக்குச் சாலையில் இருந்து 4 வழிச்சாலையில் மொபட் ஏறிய போது அந்த வழியே வத்ராயிருப்பைச் சேர்ந்த மகாலிங்கம் ஓட்டிவந்த டேங்கர் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட்டில் உரசியது.
இதில் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து பிரபுவும், ராமேசுவரியும் சாலையில் விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரபுவுக்கு லேசான காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 15). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ராமச்சந்திரன் தனது உறவினர் மகன் ரித்தீசுடன் (5) சின்ன உலகாணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
நெடுங்குளம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென நின்றது. இதனால் ராமச்சந்திரன் சென்ற மொபட் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் ராமச்சந்திரனும், ரித்தீசும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். ரித்தீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
பேரையூர்:
தஞ்சாவூர் தில்லை நல்லூரைச் சேர்ந்தவர் நாராயணராஜ் (வயது48). அக்குபஞ்சர் டாக்டர். இவர் மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் வாரந் தோறும் 2 நாட்கள் முகாம் நடத்துவார்.
வழக்கம்போல் முகாம் நடத்துவதற்காக இன்று திருமங்கலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கள்ளிக்குடி சென்ற அவர் முகாம் நடைபெறும் இடத்துக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்,
அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக நாராயணராஜை 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். செல்லும் வழியிலேயே நாராயணராஜ் பரிதாபமாக இறந்தார்.
கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்